விஷமக்காரக் கண்ணன்

விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
அவன் நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்

கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்

எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு
அவள் விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி என்பான்
விஷமக்காரக் கண்ணன்

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது

சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்
அவனை திருடன் என்று சொல்லிவிட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்

வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்

 

Vishamakara Kannan by OS Arun

 

17.8K

Comments

ttdqh

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

ரிஷிகளில் முதலாவதாகத் தோன்றியவர் யார்?

சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் வருண பகவான் யாகம் நடத்தினார். இதன் காரணமாக ஏழு ரிஷிகள் பூமியில் பிறந்தனர். பிருகு முனிவர் முதலாவதாக ஹோம குண்டத்திலிருந்து தோன்றிய ரிஷி ஆவார்.

Quiz

எத்தனை வேதங்கள் உள்ளன?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |