விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
அவன் நீலமேகம் போலே இருப்பான்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி
கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
விஷமக்காரக் கண்ணன்
பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக்கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால்
நெக்குருகக் கிள்ளி விட்டு
அவளை நெக்குருகக் கிள்ளி விட்டு
அவள் விக்கி விக்கி அழும்போது
இதுதான்டி முகாரி என்பான்
விஷமக்காரக் கண்ணன்
வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க ஒண்ணாது
சும்மா ஒரு பேச்சுக்கானும்
திருடன் என்று சொல்லிவிட்டால்
அவனை திருடன் என்று சொல்லிவிட்டால்
உன் அம்மா பாட்டி அத்தை தாத்தா
அத்தனையும் திருடனென்பான்
விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்ணன்
விஷமக்காரக் கண்ணன்
சரஸ்வதி நதியில் 5 நாட்கள் தொடர்ந்து குளிப்பது உங்களை தூய்மைப்படுத்துகிறது. யமுனை உங்களை 7 நாட்களில் தூய்மைப்படுத்துகிறது. கங்கை உடனடியாக சுத்திகரிக்கப்படுகிறது. ஆனால் நர்மதையைப் பார்த்தாலே சுத்திகரிக்கப்படுகிறது. - மத்ஸ்ய புராணம்.
1. குளியல் 2. சந்தியா வந்தனம் - சூரியக் கடவுளிடம் பிரார்த்தனை. 3. ஜபம் - மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள். 4. வீட்டில் பூஜை/கோவிலுக்குச் செல்வது. 5. பூச்சிகள்/பறவைகளுக்கு சிறிது சமைத்த உணவை வீட்டிற்கு வெளியே வைத்திருப்பது. 6. குறைந்தது ஒருவருக்ககாவது உணவு வழங்குதல்.
நடராஜரின் நாட்டியத்தின் மஹிமை
அனைத்து ஆசைகளையும் அடைய திரிபுரசுந்தரி மந்திரம்
ௐ ஹ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ க்லீம்ʼ பராபரே த்ரிபுரே ஸர்வமீப்ஸிதம்....
Click here to know more..பிருஹஸ்பதி கவசம்
அஸ்ய ஶ்ரீப்ருʼஹஸ்பதிகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய. ஈஶ்வர ருʼஷி꞉.....
Click here to know more..