லாலி ஆடினாள் லட்சுமி

லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீலட்சுமி இன்று இங்கு லாலி ஆடினாள்
ஸ்ரீகாஞ்சி தன்னிலே கருட வாகனத்திலே
வரதராஜ சகிதமாக பெருந்தேவி தாயாராக (லாலி)
வ்ருஷபாத்ரி திருப்பதியில் வேங்கடேச சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கையாக (லாலி)
ஸ்ரீரங்கபதியிலே ஆதிசேஷனரவணையில்
மந்தகாச வதன்மோடு ரெங்கநாத சகிதமாக (லாலி)
ப்ரஹலாதனின் முறையை கேட்டு தூணைப்பிளந்து
காட்சி அளித்த நரசிம்ம சகிதமாக லட்சுமி நரசிம்மராக (லாலி)
சரயு நதிக் கரையினிலே அயோத்தி மாநகரிநிலே
ஸ்ரீராமசகிதமாக சீதாதேவி இங்கு இன்று (லாலி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருமகளாய்
சூடிக்கொடுத்த சுடர்கொடியாய் ரங்கமன்னார் சகிதமாக (லாலி)
துவாரகா புரிதன்னிலே நவரத்ன ஊஞ்சலிலே
ஸ்ரீகிருஷ்ண சகிதமாக ருக்மிணி ப்ரேமையுடன்
லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீலட்சுமி இன்று இங்கு லாலி ஆடினாள் (லட்சுமி லாலி ஆடினாள்)

 

:Laali Aadinaal Song

 

55.6K

Comments

wi25a

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் எது?

சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த மந்திரம் - நமசிவாய. இது பஞ்சாக்ஷர மந்திரம் எனப்படும். இந்த மந்திரம் ஓம் உடன் ஓம் நமசிவாய என்ற வடிவத்திலும் உச்சரிக்கப்படுகிறது.

ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் யார்?

மகாமுனி வியாஸர் ஸ்ரீமத் பாகவதத்தின் ஆசிரியர் ஆவார். அவர் வேதவியாஸர் என்றும் அழைக்கப்படுவார்.

Quiz

மகர சங்கராந்தி யாருக்கு அர்பணிக்கப்பட்ட தினம்?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |