லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீலட்சுமி இன்று இங்கு லாலி ஆடினாள்
ஸ்ரீகாஞ்சி தன்னிலே கருட வாகனத்திலே
வரதராஜ சகிதமாக பெருந்தேவி தாயாராக (லாலி)
வ்ருஷபாத்ரி திருப்பதியில் வேங்கடேச சகிதமாக
அபய ஹஸ்த அலங்கார அலமேலு மங்கையாக (லாலி)
ஸ்ரீரங்கபதியிலே ஆதிசேஷனரவணையில்
மந்தகாச வதன்மோடு ரெங்கநாத சகிதமாக (லாலி)
ப்ரஹலாதனின் முறையை கேட்டு தூணைப்பிளந்து
காட்சி அளித்த நரசிம்ம சகிதமாக லட்சுமி நரசிம்மராக (லாலி)
சரயு நதிக் கரையினிலே அயோத்தி மாநகரிநிலே
ஸ்ரீராமசகிதமாக சீதாதேவி இங்கு இன்று (லாலி)
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் திருமகளாய்
சூடிக்கொடுத்த சுடர்கொடியாய் ரங்கமன்னார் சகிதமாக (லாலி)
துவாரகா புரிதன்னிலே நவரத்ன ஊஞ்சலிலே
ஸ்ரீகிருஷ்ண சகிதமாக ருக்மிணி ப்ரேமையுடன்
லாலி ஆடினாள் லட்சுமி லாலி ஆடினாள்
ஸ்ரீலட்சுமி இன்று இங்கு லாலி ஆடினாள் (லட்சுமி லாலி ஆடினாள்)
லோமஹர்ஷணன்மற்றும் உக்ரஸ்ரவன் இருவருமே புராண உரையாசிரியர்கள். உக்ரஸ்ரவாவும் மகாபாரதத்தை விவரித்தார். இருவரும் சூத சாதியைச் சேர்ந்தவர்கள். உக்ரஸ்ரவன் லோமஹர்ஷனின் மகன்.
1. பிராமணங்கள், ஆரண்யகங்கள் மற்றும் உபநிடதங்களுடன் நான்கு வேத சம்ஹிதைகள் 2. ஸ்மிருதிகள் 3. இதிஹாசகள் 4. புராணங்கள் 5. தரிசனங்கள் 6. துணை நூல்கள் - வேதாங்கங்கள், தர்ம சூத்திரங்கள், நிபந்த கிரந்தங்கள்
பெண் குழந்தைக்கு பாதுகாப்பு மந்திரம்
ௐ முஞ்ச பக ட³ப³க³ஶாக³ச்ச² பா³லிகே ட²ட².....
Click here to know more..கண்ணா ஓடி வா
கண்ணா ஓடி வா. உனை நான் தேடவா. உட்னே ஓடி வா. அடமே நீங்கி வா.....
Click here to know more..கங்கா லஹரி ஸ்தோத்திரம்
ஸம்ருʼத்தம்ʼ ஸௌபாக்யம்ʼ ஸகலவஸுதாயா꞉ கிமபி தன் மஹைஶ்வர்�....
Click here to know more..