ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி

ஶ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஶ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஶ்ரீசக்ர)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனதகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி(ஶ்ரீசக்ர)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னோர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஶ்ரீசக்ர)
துன்ப்ப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஶ்ரீசக்ர)

 

32.4K

Comments

akGGs
பாடகர் மிகவும் அருமையாக பாடுகிறாள்! -ஐயாசாமி, காரைக்குடி

Read more comments

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இறுதி சடங்குகள் எவ்வாறு செய்யப்பட்டது?

ஸ்ரீ கிருஷ்ணர் தனது உடலை குஜராத்தின் வெராவல் அருகே பால்கா தீர்த்தத்தில் விட்டுச் சென்றார். அதன் பிறகு பகவான் வைகுண்டம் சென்றார். இறைவனின் உடல் பால்கா தீர்த்தத்தில் அவரது அன்பு நண்பன் அர்ஜுனனால் தகனம் செய்யப்பட்டது.

சப்தரிஷி என்பவர்கள் யார்?

சப்தரிஷிகள் மிகவும் முக்கியமான ஏழு ரிஷிகள் ஆவார்கள். இவர்கள் யுகங்களில் மாற்றக் கூடியவர்கள் ஆவார். வேதாங்க ஜோதிடத்தின் அடிப்படையில் சப்தரிஷி மண்டலத்தில் உள்ள பிரகாசமான அந்த ஏழு ரிஷிகள் அங்கிரஸ், அத்ரி, க்ரது, புலஹர், புலஸ்த்யர், மரீசீ மற்றும் வஸிஷ்டர் ஆவார்கள்.

Quiz

முதல் நாள் திருமணம் செய்து மறு நாள் கணவன் மரணம் அடையும் திருவிழா எந்த கோவிலில் நடக்கிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |