காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார்

காரைக்கால் அம்மையார் என்பவர் சிவபெருமானின் 63 நாயன்மார்களிள் ஒருவர் ஆவார். இவர் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை மற்றும் அற்புதத் திருவந்தாதி என்கிற நூல்களை எழுதியுள்ளார். இவருக்கு காரைக்கால் சிவன் கோவிலில் தனியாக ஒரு சன்னிதியும் அமைக்கப்பட்டுள்ளது. இவர் முக்காலத்தில் காரை வனம் என்று அழைக்கப்பட்ட காரைக்காலில் பிறந்தார். இவரது பெயர் புனிதவதி. சிறுவயதிலேயே இவர் சிவபக்தராக இருந்தார். இவர் ஒரு வணிக குடும்பத்தில் பிறந்தவர். அதனால் பரமதத்தன் என்கிற வணிகனுக்கு மணமுடிக்கப்பட்டார். ஒரு சமயத்தில் மற்றொரு வியாபாரி பரமதத்தனுக்கு இரண்டு மாம்பழங்களை பரிசாக அளித்தான். பரமதத்தன் அந்த மாம்பழங்களை தன் வீட்டிற்கு அனுப்பினான். புனிதவதி தனியாக வீட்டில் இருந்த பொழுது ஒரு சிவபக்தர் அங்கே வந்தார். சிவபக்தருக்கு வெறும் சாதத்தை மட்டும் பரிமாறக்கூடாது என்று தர்மம். வீட்டில் ஏதும் சமைக்காததால் புனிதவதி அவருக்கு தயிர் சாதம் மற்றும் ஒரு மாம்பழத்தை பரிமாறினாள். சிவபக்தர் அதை சாப்பிட்டு மகிழ்ச்சி அடைந்து ஆசீர்வதித்தார். பரமதத்தன வீட்டிற்கு வந்தான். அவன் சாப்பிடும் பொழுது ஒரு மாம்பழத்தை உண்டான். அவனுக்கு அது மிகவும் பிடித்ததால் இன்னொரு மாம்பழத்தையும் எடுத்துக் கொண்டு வா என்று கேட்டான். புனிதவதி சமையலறைக்கு சென்ற போது இன்னும் ஒரு மாம்பழத்தை நான் சிவ பக்தருக்கு கொடுத்துவிட்டேனே, இப்பொழுது என்ன செய்வது என்று வருந்தி சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டாள். திடீரென்று ஒரு புதிய மாம்பழம் அவளது கையில் வந்து விழுந்தது. பரமத்தத்தன் அந்த மாம்பழத்தையும் சாப்பிட்டுவிட்டு சொன்னான் 'முதலில் சாப்பிட்ட மாம்பழத்தை விட இது ருசியாக இருக்கிறது. எப்படி?'. புனிதவதி நடந்ததை அவருக்கு உரையாற்றினால். பரமதத்தன் அதை நம்பவில்லை. 'அப்படி என்றால் திரும்பியும் வேண்டிக்கொள். இன்னும் ஒரு மாம்பழம் வருகிறதா என்று பார்ப்போம்' என்று சொன்னான். புனிதவதி திரும்பி வேண்டிக் கொண்டாள். இன்னும் ஒரு மாம்பழம் அவளது கையில் வந்து விழுந்தது. பரமதத்தன் அந்த மாம்பழத்தை உண்பதற்காக தொட்ட பொழுது அது மறைந்துவிட்டது. அப்பொழுது அவனுக்கு புனிதவதி ஒரு தெய்வீகமான பெண்ணென்று புரிய வந்தது. 'எனக்கு உங்களுடன் இருக்க அருகதை இல்லை. நீங்கள் சிவபக்தியில் ஈடுபடுங்கள்' என்று சொல்லி அவன் புனிதவதையை விட்டு விட்டான். சிவபக்தியில் ஈடுபட்ட புனிதவதி, காரைக்கால் அம்மையாராக மாறினார். 

பரமதத்தன் அதற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டான். இரண்டாவது திருமணத்தில் அவனுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு புனிதவதி என்ற பெயரை அவனது முதல் மனைவிக்கு மரியாதை செலுத்த அவன் வைத்தான். பிறகு ஒரு முறை பரமதத்தன் தன் இரண்டாவது மனைவியுடனும் குழந்தையுடனும் காரைக்கால் அம்மையாரை சந்தித்தான். அப்போது அம்மையாரை தெய்வமாக கருதி அவர்கள் அம்மையாரின் காலில் விழுந்தார்கள். அம்மையார் சிவபெருமானிடம் தனக்கு தெய்வீக உடலை கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். சிவபெருமானும் அம்மையாரின் வேண்டுகோளை நிறைவேற்றினார். பின்னர் அம்மையார் சிவபெருமானின் பூதகணத்தில் ஒருவராக ஆனார். 

அம்மையார் சிவபெருமானை சந்திக்க ஒரு முறை கைலாயத்திற்கு சென்றார். கைலாயம் சிவபெருமான் இருக்குமிடம் என்ற காரணத்தினால் அம்மையாரின் கால் அங்கே படக்கூடாது என்ற கருதி கைகளாலே நடந்து சென்றார். சிவபெருமானே அம்மையாரை 'அம்மையே' என்று அழைத்தார். சிவபெருமான் அம்மையாரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்ட பொழுது அம்மையார் எனக்கு மறுபிறவி வேண்டாம், உங்கள் தாண்டவத்தை கண்டு கொண்டு உங்கள் காலடியில் இருக்க எனக்கு ஆசீர்வதியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் அம்மையாருக்கு இதை அருளி தனது தாண்டவத்தை காட்டினார். 

அம்மையாருக்கு மரியாதை செலுத்த ஒவ்வொரு ஆண்டும் காரைக்கால் சோமநாதர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி அன்று மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழா அன்று சிவபெருமான் ஊர்வலம் போகும்பொழுது மாங்கனிகளை அவர் மேலே மாடியிலிருந்து தூவிவிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவார்கள். அம்மையார் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்கிற முறையை முதல்முறையாக துவங்கி வைத்தவர் என்று புகழ் பெற்றவர்.

தமிழ்

தமிழ்

வேறு தலைப்புகள்

Click on any topic to open

Copyright © 2025 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |
Vedahdara - Personalize
Whatsapp Group Icon
Have questions on Sanatana Dharma? Ask here...