ஆழ்வார் திவ்ய பிரபந்தத் திருவேங்கடப் பாசுரங்கள்

azhvar divya prabandha tiruvenkata pasurangal pdf cover page

ஆழ்வார் திவ்ய பிரபந்தத் திருவேங்கடப் பாசுரங்கள்

PDF புத்தகத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

79.4K

Comments

2u3ra

பிரம்மவாதினி மற்றும் ரிஷிகா இருவரும் ஒன்றா?

பிரம்மவாதி என்பவர் வேதத்தின் முழு பொருளும் பற்றிப் பேசக் கூடியவர் ஆவார். பிரம்மவாதினி பெண் அறிஞர் ஆவார். இவர்கள் பிரம்மவாதியின் பெண்பால் ஆகும். ரிஷி என்பவர் மந்திரங்களை உபதேசிப்பவர் ஆவார். ரிஷிகா என்பவர் மந்திரங்களை உபதேசிக்கும் பெண்கள் ஆவார். அனைத்து ரிஷிகாகளும் பிரம்மவாதினி ஆவார்கள், ஆனால் பிரம்ம வாதினி அனைவரும் ரிஷிகா அல்ல.

பெண் ரிஷி எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

பெண் ரிஷி ரிஷிகா என்று அழைக்கப்பட்டனர்.

Quiz

எவ்வளவு ரிஷிகள் ஜோதிடம் எடுத்துரைப்பவர்களாக கருதப்படுகிறார்கள் ?

ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் அமைத்த திருத்துழாய்த் திருநந்தவனத்தில் அவருக்கு மகளாக ஆடித்திங்கள் பூர திருநட்சத்திரத்தில் தோன்றியவள் ஆண்டாள். இவளைப் பூதேவியின் அம்சமாகக் கூறுவர். பெரியாழ்வார் புனைந்த மாலையைத் தான் சூடி அழகு பார்த்துப் பின் வடபத்திரசாயிக்கு அளித்து மகிழ்ந்தமை யால் இவள் சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் பெயர் பெற்றாள். மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என்று திருமாலுக்கே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஞானப்பூங்கோதை இவள். இவள் காதலன்பில் பாடிய பாசுரங்கள் பள்ளமடைபோல் பாய்ந்து பக்திப் பயிர்
வளர்ப்பன. இவள் இயற்றியது திருப்பாவையும் நாச்சியார் திருமொழியுமாகும். நாச்சியார் திருமொழியில் பதினாறு பாசுரங்கள் திருவேங்கடவனைப் பற்றியதாகும். அவற்றுள் விண்ணீ ல மேலாப்பு என்னும் பதிகம் மேகவிடுதூதாக அமைந்துள்ளது. தன்னைக் கலந்து பிரிந்தபோது எம்பெருமான் கார்காலத்தில் வருவதாகச் சொல்லிச் சென்றான். கார்காலமும் வந்தது. மேகங்கள் சூழ்ந்திருக்கக் கண்டு எம்பெருமான் வரவில்லையே என்று ஏங்கித் தன் துயரத்தை மேகங்களைப் பார்த்துச் சொல்லி அங்குச் சென்று தூதுமொழியாக உரைக்க வேண்டுகிறாள் இப்பதிகத்தில், சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, விஷ்ணுசித்தர் வாழ்வை, 'ஆமுக்தமால்யதா' என்னும் காவியமாக மன்னர் கிருஷ்ணதேவராயர் இயற்றியுள்ளது அறியற்பாலதாகும்.
எழுவார் விடைகொள்வார் என்துழா யானை வழுவா வகைநினைந்து வைகல்-தொழுவார் வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர் மனச்சுடரைத் தூண்டும் மலை .
வகையறு நுண்கேள்வி வாய்வார்கள் நாளும் புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தித் -திசைதிசையின் வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே வெண்சங்கம் ஊதியவாய் மாலுகந்த வூர். -
ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை பேர வெறிந்த பெருமணியைக்-காருடைய மின்னென்று புற்றடையும் வேங்கடமே மேலசுரர் எம்மென்னு மால திடம்.
இடந்தது பூமி எடுத்தது குன்றம் கடந்தது கஞ்சனைமுன்னஞ்சக்-கிடந்த துவும் நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே பேரோத வண்ணர் பெரிது,
நம்மாழ்வார்
ஆழ்வார்கள் அனைவரையும் அவயவங்களாகக் கொண்டவராய்.
தான்
அவயவியாய்ச் சிறப்பு
பெற்றவர் நம்மாழ்வார். தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநகரி என்னும் திருக்குருகூரில் வேளாள வருணத்தில் திருமாலுக்கே தொண்டு பூண்டு ஒழுகும் குலத்தில், காரியார் உடைய நங்கை ஆகியோர்க்குப் பிறந்தவர் நம்மாழ்வார். இவர் வைகாசித் திங்கள் விசாக நட்சத்திரத்தில் அவதரித்தார். இவரை சேனை முதலியார் எனப்பெறும் விஷ்வக்சேனரின் அம்சமாகக் கூறுவர். பொலிந்த நின்ற பிரான் (ஆதிநாதர்) திருக்கோயில் புளிய மரத்தடியில் குழந்தைப் பருவம் தொடங்கி பதினாறு வயது வரை வாய் திறவாமல் இருந்தார். அப்போது மதுரகவியாழ்வார் இவரைச் சந்தித்து வாய்த்திறக்கவைத்து இவரது சீடரானார். எம்பெருமானது ஐந்து நிலைகளான பரமபதத்தில் இருக்கும் இருப்பு. வியூஹ மூர்த்திகள், விபவ மூர்த்திகள், அந்தர்யாமி எம்பெருமான், அர்ச்சாவதார எம்பெருமான்கள் ஆகியோர் ஆழ்வாருடைய நெஞ்சென்னும் உட்கண்ணுக்குச் சேவை காட்டினர். இவற்றை அனுபவித்து, அவ்வநுபவத்தாலுண்டான பக்தி உள்ளடங்காமல் வழிந்து திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி. திருவாய்மொழி என்னும் நான்கு ப்ரபந்தங்களாக வெளிப்பட்டது.
திருவிருத்தத்தில் எட்டு பாசுரங்களும், பெரிய திருவந்தாதியில் ஒரு பாசுரமும். திருவாய்மொழியில் முப்பத்தைந்து பாசுரங்களும் திருவேங்கடவனைப் பற்றி பேசினவையாகும். இவற்றில்.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |