ஆடிவந்தேன் ஆடிவந்தேன்
அஞ்சு கொடைக்காரி
பாடிவந்தேன் பாடிவந்தேன்
பாண்டியனார் தேவி
தேடிவந்தேன் தேடிவந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ
நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி
ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேல ஆகாதம்மா
நானே ஒரு மாயை
தொட்டியத்தில் அழகு தில்லையில்
திருச்சி நகர் உறையூரில்
காளி என்று கோவில் கொண்டு
கொலுவிருக்கும் அம்மனும் நானே
பண்ணாரியில் சமயபுரத்தில்
புஞ்சை வளர் தஞ்சையினில்
மாரி என்று பெயர் படைத்து
மக்களை காக்கும் அன்னையும் நானே
அகிலமும் சுழலாதா
அடியே என் பிடியினிலே
அதியசயம் நிகழாதா
நெனச்சா ஒரு நொடியினிலே
கைகளில் சக்கரம் சங்கை
கொண்ட கோவிந்தராஜனின் தங்கை
மார்சடை மீதினில் கங்கை
கொண்ட வள்ளலும் வள்ளிடும் நங்கை
ஆடி வந்தேன்
ஆடிவந்தேன் ஆடிவந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடிவந்தேன் தேடிவந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ
பம்பச்சத்தம் முழங்கும் வேளையில்
பம்பரமா ஆடிக்கிட்டு
பாவத்துக்கு நீங்கி வந்த
பைரவி நான் பாரடியம்மா
வேப்பஞ்சேல இடுப்பில் கட்டுற
வஞ்சியற்க்கு வாழ்வு தந்து
வாழ வைக்க என்னை விட்டா
வையத்திலே யாரடியம்மா
கருங்கல்லு சிலைதான்னு
எளிதா நீயும் நினைக்காதே
கொடுப்பத கொடுக்காம
மறைச்சா இங்கு நடக்காதே
பூவையே பூவையே கேளு
நான் சொல்லுறேன் சொல்லுறேன் புத்தி
பூமியில் ஏதடி கூறு
இந்த சக்தியை மிஞ்சிற சக்தி
ஆடி வந்தேன்
ஆடி வந்தேன் ஆடிவந்தேன்
அஞ்சு கொடைக்காரி
தேடிவந்தேன் தேடிவந்தேன்
தேன் வடிக்கும் பூவ
நான் இருக்கும் கோவிலுக்கு
நாளும் அது தேவ
நான் பாம்பு என வேம்பு என
மாறுகிற சாதி
மாரி இவ சன்னிதியில்
மாறாது நீதி
ஊரறியும் உலகறியும்
கேட்டு பாரு நீயே
மாய வேல ஆகாதம்மா
நானே ஒரு மாயை
1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ
அவருடன் ஒற்றுமையை அடைய உங்கள் உடல், மனம் மற்றும் அகங்காரத்தை முழுமையாக கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருமை நிலையில், கடவுள் மட்டுமே தன் மூலம் செயல்படுகிறார் என்பதை பக்தன் உணர்கிறான்.