இமமாதிரி நாயக்கா காலக கோபுரங்கள் பல கட்டிமுடிக்காமலே விடுபட்டிருப்பதைக் காணமுடிகின்றது இங்குள்ள தெற்குக கோபுரம் அமைப்பில் திருவரங்கத்துத் தெற்குக் கோபுரம் கட்டி முடிக்கப்படாத நிலையில் எவ்வாறிருந்ததோ அது போன்றேயுள்ளது கட்டி முடிக்கப்படாத நிலையிலும் இது ஒரு சிறந்த கட்டடக் கலைக் கூறாக விளங்குகின்றது என்பதில் ஐயமில்லை மிகப்பரந்த அடித்தளத்தைக் கொணடிருக்கும் தெற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் கட்டி முடிககப்பட்டிருந்தால் இவை மிக உயரத்தை எட்டியிருக்கும் என எம் ஏ .அனந்தாழ்வாரும் அலெகஸாண்டா ரீயும் கருதுகின்றனர் !.
கிழக்குக கோபுரம் மேற்குக் கோபுரத்தைப் போன்று மூன்றாவது பிரகாரச்சுவரை ஒட்டி அமைக்கப்படவில்லை இது இரண்டாவது பிரகாரத்திற்கும் நுழைவுப் பாதைக்கும் இடையில் கட்டப்பட்டுள்ளது. இது மற்ற தென்னிந்தியக கோயில் கோபுரங்களைப் போன்று கலகாரப் பகுதிக்குமேல் சுதையால் அல்லது செங்கல்லால் கட்டப்படவில்லை. மாறாக அடி முதல் நுனிவரை மெனமையான கல்லால் எழுப்பப்பட்டிருக்கினறது. இது ஒருவேளை கோபுரத்தை கடலின் உபபுக்காற்றிலிருந்து காப்பாற்றுவதற்காகச் செய்யப்பட்டிருக்க வேண்டும். கோபுரத்தின் முன்தோற்றம் ஆவமாகும் (நீண்டது); பக்கத்தோற்றம் விஸ்தரமாகும் (விரிந்தது). இந்த ஒன்பதுநிலை கோபுரத்தின் வெளிப்புறத் தோற்றம் பிரம்மாண்டமானதாகும். முகப்புப் பகுதிகள் நேர்கோட்டில் திரமாக அமைந்துள்ளன. இதன் ஒவ்வொரு தளம் அல்லது நிலையின் மத்தியிலும் பிதுக்கம் (projection) காட்டப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இதன மேற்பகுதி கி.பி 1900 இல் ஏ.எல.ஆர். செட்டியார் குடும்பத்தாரின் முயற்சியில் தேவஸ்தான நிர்வாகக குழுவினரால் கட்டி முடிக்கப்பட்டது.
ஒன்பதுநிலை கோபுரம் அமைக்கும் பணியை முதன்முதலில் தொடங்கியது கி.பி.1216 இல் ஆட்சி பீடமேறிய முதலாம் மாறவர்மன சுந்தரபாண்டியன் காலத்திலாகும். இதற்கான உதாரணங்களை மதுரையிலும் சிதம்பரத்திலும் காணலாம். இராமேசுவரம்கோயில் கிழக்குக்கோபுரம் பெரும்பாலும் இக்கால கட்டத்திலோ அல்லது சற்று பிந்தியோ கட்டத் தொடங்கியிருக்க வேண்டும் இக்கோபுரம் கி.பி.1659 இல் தளவாயசேதுபதியால் கட்டப்பட்டதாக்க கருத்தொன்று நிலவுகிறது. இது திருப்பணி வேளையாக இருந்திருக்குமே அன்றிக் கோபுரம் புதியதாக கட்டப்பட்டிருகக முடியாது அக்காலப் பொருளாதார நிலையும் இதற்கு உதவியாக இருந்திருக்க வாய்பபில்லை கி.பி.1092ஆம் ஆண்டு கல்வெட்டொன்றின் அடிப்படையில் அக்காலத்திலேயே பிரதானக் கோயிலுக்கு முன்பு ஒரு கோபுரம் இருந்திருக்க வேண்டுமென்று கே.வி இராமன் கருதுகின்றார் இது அக்காலத்தில் ஏதோ ஒரு அமைப்புடைய கோபுரம் ஒன்று பழைமையான கோயில்களான 1, II, III மற்றும் இரடடைக கோயில்களுக்கு முன்புறத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பதையே நமக்கு உணர்த்துகின்றது ஏனெனில் இன்றுள்ள
பிரதான சன்னதி (இராமநாதா சன்னதி] அப்போது
காணப்படவில்லை).
மேற்குக் கோபுரம் ஐந்துநிலை மாடமாகும். இதன் உள்பககங்கள் கட்டடக்கலையின் அலங்கார வேலைப் பாடுகளைக் காட்டுகின்றன இக்கோபுரத்தின் மேற்கு முகப்பில் (facade) சிதைந்த நிலையில் உள்ள சிற்பங்கள் காணப்படுகின்றன. கிழக்குக் கோபுரத்தைப் போவன்றி இதில் பூதகணங்கள், ரிஷபங்கள், கிருஷ்ணா, இராதை, ருகமணி, பிச்சாடனா, ரிசிபத்தினிகள், மான என்று நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய, பெரிய சிற்பங்கள் அமைந்துள்ளன.
மண்டபங்களும் தூண்களும்
முதலாவது மற்றும் இரண்டாவது பிரகாரங்களுககு இடைப்பட்ட பகுதியில் சரியாக வரிசைப்படுத்தப்படாத தூண்களைக கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது நந்திமண்டபம் என்றழைக்கப்படுகின்றது. இதன நடுவில் மிகப்பெரிய நந்தி ஒன்று அமர்ந்துள்ளது. முதல் பிரகாரததில நந்தி மணடபத்தின அருகில் இராமநாதர் சனனதிக்குச் செல்லும் உயரமான வாயில் மெருகூட்டப்பட்ட கருங்கல்லால் ஆனதாகும். இதன உள்ளே சென்றால் இதற்கு இரண்டு பக்கத்திலும் சூரியன சந்திரன் சிறபங்கள் உள்ளன45. இது ஒருவேளை பரி. ரதேவதைகள் இங்கு முன்னமே அமைக்கப்பட்டிருநதிருக்க வேண்டுமெனபதை நினைவூட்டுகினறது அம்மன சன்னதிக்கு முனனால் பெரிய, உயரமான தூண்களைக் கொண்ட நவசகதி அல்லது சுகரவாரமணடபம் உள்ளது இத்தூண்களில் ஆளுயர அம்மன் இதற்கருகே அனுப்புமண்டபமும் கலயாண மணடபமும் உள்ளன விஜயநகர நாயக்கா காலத்தில் தமிழகத்துக் கோயில்கள் சிலைகளைக காணலாம்.
பலவற்றில கட்டப்பட்ட மண்டபங்களுடன் ஒப்பிடும்போது இவை மிகச்சிறியனவாகும் இம்மண்டபங்களின் உட்பகுதிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இராமநாதா சன்னதிக்குச் செல்லும் பிரதான நுழைவுவாயிலைக் கொண்டுள்ள சேதுபதி மண்டபமே 6 இக்கோயில வளாகத்தின இறுதிக்கட்ட வளாச்சியாகும் இதன தூண்களில் அழகான சிறபங்கள் உள்ளன.
தெ.வே.மகாலிங்கம் அவர்களின கருததுப்புடி மதுரைக் கலைப்பாணிக கோயில்களில் நான்குவிதமான தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன அவை யாளிவகை, ஆளுயரச் சிற்பத்தினைக் கொண்ட தூண் வகை, அலங்கரிக்கப்பட்ட ஒடடுத்தூண் வகை மற்றும் இறையுருவமைப்பு வகை47 என்பனவாகும் இராமேசுவரத்தில் யாளிவகைத் தூண்கள் மிக அரிதாகக் காணப்படுகின்றன. மற்ற மூன்றுவகைத் தூணகள் அதிகமாக உள்ளன அவற்றில் தொனமககதையைக காடடும் சிற்பங்கள் செதுக்கப்படடுள்ளன. தூண்களின் ஒவ்வொரு பகுதியிலும் இறையுருவங்கள், நடனமாதர்கள் மற்றும் மிருகங்களின உருவங்களைக் காணலாம். இங்கு தூண்களில் காணப்படும் மிக முக்கியமான அமைப்பு யாதெனில் யானை அல்லது குதிரை மீது அமர்ந்திருக்கும் வீரர்கள் மற்றும் வேட்டையாடுவோர் போன்ற சிற்பங்களேயாகும். தூண்கள் கட்டடக்கலை உறுப்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளன. அவை பத்மாசனம், கருக்குப்படடி, பாதம், பத்மமாலை, கண்டம், கலசம், விருத்தம், தாடி, கணடம், கும்பம், கண்டம், பத்மம், பலகை, வீரகண்டம் மற்றும் போதிகை ஆகிய செங்குத்துப பகுதிகளைக கொண்டுள்ளன. சில தூண்கள் எளிமையானவை. வேறுசில அணியொட்டிவகைத் தூண்கள் ஆகும். தூணகளின் அளவும் அமைப்பும் அதன் அடிபபாகத்தின் அமைப்பைப பொருத்து அமைந்துளளன. மண்டபங்களின் மூலைப்பகுதிகளில் சதுரமான தூண்கள் நிறகின்றன. அவையே மண்டபங்களையும் பிரகாரஙகளையும் தாங்குகின்றன.
இராமேசுவரம் கோயில் வளாகததின் கட்டடக்கலை அமைப்பையும் அதன் வளர்ச்சியையும் பற்றிய மேலே கண்ட விளக்கமான ஆய்வுபபடி தற்போது இங்குள்ள தொன்மையான கட்டடங்கள் கி.பி 10 ஆம் நூற்றாண்டில் கட்டத் தொடங்கப்பட்டு, இக் கட்டட வளாச்சி கி.பி.18 ஆம் நூற்றாண்டுவரை செனறிருக்க வேண்டுமென்றும் புலனாகிறது ஒரே கோயில் வளாகத்திற்குள் வேறுபட்ட கட்டடக்கலைக் கூறுகள் இடம் பெற்றிருக்கின்றன.

Ramaswamy Sastry and Vighnesh Ghanapaathi

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |