பொங்கல், தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும். இது தை மாதத்தின் முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது தமிழ் மரபுகளின் மிக முக்கியமான ஒரு பண்டிகையாகும். 

தை மாதம் தொடங்கி ஆனி மாதம் வரை உத்தராயணம் எனப்படும். இந்த சமயத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கை நோக்கி பயணிப்பார். ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை தக்ஷிணாயணம். புராணங்களில் உத்தராயணம் மங்களகரமாகவும் தக்ஷிணாயணம் அமங்கலமாகவும் கருதப்படுகிறது. மகாபாரதத்தில் சொல்லப்பட்ட குருக்ஷேத்திரப் போரில் அர்ஜுனரின் அம்புகளால் தாக்கப்பட்ட பீஷ்மர் தன்னுயிரை தட்சிணாயணத்தில் விடக்கூடாது என்பதற்காக உத்தராயணம் பிறக்கும் வரை காத்திருந்து தன்னுயிரை விட்டார். 

பொங்கல் என்பது மகர சங்கராந்தி மற்றும் தைத்திருநாள் என்றும் கூறப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பார். பொங்கல் பண்டிகை மூன்று நாளாக கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாள் போகி. அன்று இந்திரனை பூஜிப்பார்கள். பொங்கலன்று சூரிய பகவானை பூஜிப்பார்கள் மற்றும் மாட்டுப் பொங்கல் அன்று கோமாதாவை பூஜிப்பார்கள். 

பொங்கல் என்பதன் பெயர் தமிழ் வார்த்தை பொங்கு என்பதிலிருந்து உருவானது. இதன் பொருள் சமைத்து பொங்க வைப்பது என்று. புதிதாக விளைந்த அரிசியை மண்பானையில் போட்டு பாலூற்றி சூரிய பகவானுக்காக பொங்க வைக்க வேண்டும். பானையிலிருந்து பால் பொங்குவது போல நம் வாழ்க்கையில் சந்தோஷமும் பொங்க வேண்டும் என்று கருதி இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கும் நேரத்தில் மக்கள் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்லி இதைக் கொண்டாடுவார்கள். 

பொங்கல் தினத்தன்று சூரிய பகவானுக்காக விளக்கேற்ற வேண்டும். ஒரு வீட்டில் எத்தனை சுமங்கலிகள் உள்ளார்களோ அத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும். பொங்கல் வைக்கும் பாத்திரத்தில் மஞ்சள் கட்ட வேண்டும்.‌ பொங்கல் பானை மேல் விபூதியம் குங்குமமும் சந்தனமும் இடவேண்டும். பால் பொங்கியதற்குப் பிறகு அதில் அரிசி மற்றும் வெள்ளத்தைச் சேர்க்க வேண்டும்.‌ 

பொங்கலன்று கரும்பிற்கும் முக்கியத்துவம் உண்டு. சூரிய பகவான்தான் செடிகளுக்கு உயிர் தருபவர். அதனால் முதல் அரிசியை அவருக்கு நாம் பொங்கல் அன்று படைக்கிறோம். 

பரம்பொருளான கடவுள் கண்ணுக்குத் தெரிய மாட்டார். சூரிய பகவான் கண்ணுக்கு தெரிகின்ற கடவுள். அதனால் சூரிய ஒளி இருக்கும் இடமான முற்றத்தில் நாம் அவருக்கு பொங்களை படைக்கிறோம். 

காலை பதினோரு மணி முதல் மதியம் ஒரு மணி வரை சூரிய பகவான் ஆகாசத்தின் நடுவில் இருக்கும் நேரம். அப்பொழுது அவருக்கு பொங்கலை படைப்பது மிகவும் சிறப்பு. 

நமக்கு உணவு கிடைப்பதற்கு மிகவும் முக்கியமாக இருக்கும் சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் முறையில் இப்பண்டிகை தமிழகம் முழுவதும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது.

94.5K
14.2K

Comments

Security Code

10745

finger point right
செம்மையான இணையதளம் 🙌 -மோகன் ராஜா

மிகவும் பயனுள்ள தலம் அருமை -விசாலாக்ஷி

வேததாரா என் வாழ்க்கையில் நிறைய நேர்மறை மற்றும் அமைதியை கொண்டு வந்தது. உண்மையிலேயே நன்றி! 🙏🏻 -Mahesh

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

தங்கள் அற்பணி பண்பு மிகவும் பயனுள்ளன,மிக்க மகிழ்ச்சி,மேலும் பல பயனுள்ள தகவல்கள் தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளேன் -கண்ணன்

Read more comments

Knowledge Bank

ஹிரண்யாக்ஷனையும் ஹிரண்யகசிபுவையும் கொன்றது யார்?

ஹிரண்யாக்ஷனை வராஹமும், ஹிரண்யகசிபுவை நரசிம்மரும் கொன்றனர். இருவரும் விஷ்ணுவின் அவதாரம்.

கருத்தரிப்புடன் தொடர்புடைய சம்ஸ்காரம் என்ன?

தெய்வீக வழிபாட்டுடன் ஒரு நல்ல நேரத்தில் கருத்தரித்தல் மற்றும் ஆரோக்கியமான மற்றும் உன்னதமான சந்ததியைப் பெறுவதற்கான மந்திரங்களை உச்சரிப்பது கர்பதாரன சன்ஸ்காரம் என்று அழைக்கப்படுகிறது.

Quiz

பாலகங்காதர திலக்கின் கண்ணோட்டத்தில் இந்திரனின் உருமாதிரியாக்கம் யார்?

Recommended for you

கணபதி பீஜ மந்திரம்

கணபதி பீஜ மந்திரம்

ௐ க³ம்....

Click here to know more..

துர்கா நாம ஜபத்தின் மஹிமை

துர்கா நாம ஜபத்தின் மஹிமை

துர்கா நாம ஜபத்தின் மஹிமை ....

Click here to know more..

குரு பிரார்த்தனை

குரு பிரார்த்தனை

ஆபால்யாத் கில ஸம்ப்ரதாயவிதுரே வைதேஶிகே(அ)த்வன்யஹம் ஸம்....

Click here to know more..