கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட
(கற்பகவல்லி நின்)
நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா
(கற்பகவல்லி நின்)
எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி வைதிடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி நின்)
நாகேஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகேஸ்வரி நீயே உலகினில் துணையம்மா
(கற்பகவல்லி நின்)
அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே உன்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம்மா
(கற்பகவல்லி நின்)
நரசிம்மர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அஹோபிலத்தில் வீழ்த்தியதால் அதைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபுவின் மகனும், விஷ்ணுவின் தீவிர பக்தருமான பிரஹலாதன், அஹோபிலத்தை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்ற நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்தார். பிரஹலாதரின் மனப்பூர்வமான வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அந்த இடத்தைத் தனது இருப்பிடமாக மாற்றி அருள்பாலித்தார். பகவான் நரசிம்மர் அஹோபிலத்தை ஏன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக நுண்ணறிவை ஆழப்படுத்தும் மற்றும் பக்தியை வளர்க்கும்
ஏனெனில் அவர் வேத சொரூபத்தை ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம், அதர்வவேதம் என நான்கு பகுதிகளாகப் பிரித்தார்.
பாலாத்ரிபுர்சுந்தரியின் சக்திவாய்ந்த மந்திரத்திலிருந்து வெற்றியையும் பாதுகாப்பையும் பெறுங்கள்
ஐம்ʼ க்லீம்ʼ ஹ்ஸௌ꞉ பா³லாத்ரிபுரே ஸித்³தி⁴ம்ʼ தே³ஹி நம꞉.....
Click here to know more..நலம் பெற சனி காயத்ரி மந்திரம்
ௐ ஶனைஶ்சராய வித்³மஹே ஸூர்யபுத்ராய தீ⁴மஹி. தன்னோ மந்த³꞉ �....
Click here to know more..அபர்ணா ஸ்தோத்திரம்
ரக்தாமரீமுகுடமுக்தாபல- ப்ரகரப்ருக்தாங்க்ரிபங்கஜயுகா�....
Click here to know more..