பிரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே
சார்ந்து வணங்கி துதி பாடி ஆடி உந்தன்
சன்னதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியங்கள் யாவையும்
தந்தருள் சற்குரு நீயே (பிரபோ)
ஆதி மூல கணநாத கஜானன
அற்புத தவள ஸ்வரூபா
தேவ தேவ ஜெய விஜய விநாயக
சின்மய பர சிவ தீபா (பிரபோ)
தேடி தேடி எங்கோ ஓடுகின்றார் உன்னை
தேடி கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மத யானைகள் பணிசெய்ய
குன்றென விளங்கும் பெம்மானே (பிரபோ)
ஞான வைராக்ய விசார சார ஸ்வர
ராகலய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன நவவித
நாயக ஜெய ஜெகந்நாதா (பிரபோ)
பார்வதி பால அபார வார வர
பரம பகவ பவ தரணா
பக்த ஜன சுமுக ப்ரணவ விநாயக
பாவன பரிமள சரணா (பிரபோ)
நரசிம்மர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அஹோபிலத்தில் வீழ்த்தியதால் அதைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபுவின் மகனும், விஷ்ணுவின் தீவிர பக்தருமான பிரஹலாதன், அஹோபிலத்தை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்ற நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்தார். பிரஹலாதரின் மனப்பூர்வமான வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அந்த இடத்தைத் தனது இருப்பிடமாக மாற்றி அருள்பாலித்தார். பகவான் நரசிம்மர் அஹோபிலத்தை ஏன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக நுண்ணறிவை ஆழப்படுத்தும் மற்றும் பக்தியை வளர்க்கும்
1. ஹிரண்யாக்ஷன்-ஹிரண்யகசிபு 2. ராவணன்-கும்பகர்ணன் 3. சிசுபாலன்-தண்தாவக்ரன்.
சொற்பொழிவு மற்றும் தெளிவான பேச்சுக்கான மந்திரம்
சொற்பொழிவு மற்றும் தெளிவான பேச்சுக்கான மந்திரம்....
Click here to know more..சொற்பொழிவு திறன்களுக்கான மந்திரம்
ௐ ஐம் வாசஸ்பதே அம்ருதப்லுவ꞉ ப்லு꞉ .....
Click here to know more..சப்த நதீ பாப நாசன ஸ்தோத்திரம்
ஸர்வதீர்தமயீ ஸ்வர்கே ஸுராஸுரவிவந்திதா। பாபம் ஹரது மே க....
Click here to know more..