163.0K
24.4K

Comments

Security Code

61364

finger point right
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

சிறந்த website.. thanks🙏🙏 -தைலாம்பாள்

சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

பயன்படுத்த எளிதான வலைத்தளம் -பவன் கிருஷ்ணமூர்த்தி

நன்றி 🌹 -சூரியநாராயணன்

Read more comments

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

அவன் வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டியதில்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்

மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ 

அந்த மந்திரத்தில் அவன் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
மண்டலமே உறங்குதம்மா ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துகொண்டான் தாலேலோ 

அவன் மோகநிலை கூட ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

அவன் பொன்னழகை காண்பதர்க்கும் போதை முத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல்
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…

Knowledge Bank

வேதத்தை இயற்றியது யார்?

வேதம் அபௌருஷேய என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படும் காரணம், வேதத்திற்கு ஆசிரியர் இல்லை. வேதம் என்பது பல காலம் கடந்து முனிவர்களின் அறிவிலிருந்து மந்திரங்களாக வெளிப் பட்டதாகும்.

வேத சாஸ்திரங்கள் என்றால் என்ன?

வேத சாஸ்திரங்களில் 1. வேத சம்ஹிதைகள் 2. பிராமணங்கள் 3. ஆரண்யகங்கள் 4. உபநிடதங்கள் உள்ளன.

Quiz

அறிவின் எந்த கிளை சாரதா திலகம் என்ற உறையுடன் தொடர்புள்ளது?

Recommended for you

சரியான குருவை ஈர்ப்பது எப்படி

சரியான குருவை ஈர்ப்பது எப்படி

சரியான குருவை ஈர்ப்பது எப்படி....

Click here to know more..

நக்ஷத்ர தோஷங்களை நீக்கும் நக்ஷத்ர சூக்தம் - அதர்வ வேதம்

நக்ஷத்ர தோஷங்களை நீக்கும் நக்ஷத்ர சூக்தம் - அதர்வ வேதம்

Click here to know more..

சுக்கிர கவசம்

சுக்கிர கவசம்

ௐ அஸ்ய ஶ்ரீஶுக்ரகவசஸ்தோத்ரமந்த்ரஸ்ய. பாரத்வாஜ ருʼஷி꞉. அ....

Click here to know more..