ஜாதகம் என்றால் என்ன?
ஒருவர் பிறந்த சமயத்தில் நமக்கு வானத்தில் தெரியும் நிலையை அனுசரித்து அவரது ஜாதகத்தின் அமைப்பு இருக்கும்.
ஜாதகத்தில் மிக முக்கியமானவை - கிரகங்கள், ராசிகள், லக்னம் மற்றும் பாவங்கள்.
கிரகங்கள்: வானத்தில் ஆயிரக்கணக்கான கோள்கள் இருக்கின்றன. ஆனால் அதில் நமக்குப் பலனளிக்கும் கோள்களையே கிரகங்களாகக் கருதுகிறார்கள். அவை சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு மற்றும் கேது. இராகுவும் கேதுவும் கோள்கள் அல்ல, சூரிய-சந்திர பாதையில் இரு இணைப்புகள் தான். இதைத்தவிர மாந்தி, குளிகன் ஆகிய உபக்கிரகங்களும் பலாதேசத்தில் கருதப்படுகிறார்கள்.
ராசிகள்: சூரியன் சுற்றும் பாதை ஆகாயத்தின் 360°யில் பரவியுள்ளது. அதைப் பன்னிரண்டாகப் பிரித்தால், அதில் 30° ஒரு ராசி ஆகும். அவை மேசம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மற்றும் மீனம்.
லக்னம்: தற்போது தொடுவானத்தில் இருக்கும் ராசியே லக்னமாக கருதப்படும். லக்னம் எந்த ராசியின் எந்த அம்சத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பாவங்கள்: லக்னத்தில் இருந்து 30° ஒரு பாவம். இதைப்போலப் பன்னிரண்டு பாவங்கள் உள்ளன. உடம்பு சம்பந்தப்பட்ட விசயங்கள் முதல் பாவத்தில், பணம் மற்றும் சொத்துக்களைச் சம்பந்தப்பட்ட விசயங்கள் இரண்டாம் பாவத்தில், சகோதரர் சம்பந்தப்பட்ட விசயங்கள் மூன்றாவது பாவத்தில், சொந்தக்காரர்கள் சம்பந்தப்பட்ட விசயங்கள் நான்காவது பாவத்தில், குழந்தை சம்பந்தப்பட்ட விசயங்கள் ஐந்தாவது பாவத்தில், எதிரிகள் சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆறாவது பாவத்தில், மனைவி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஏழாவது பாவத்தில், மரணம் சம்பந்தப்பட்ட விசயங்கள் எட்டாவது பாவத்தில், நன்மை சம்பந்தப்பட்ட விசயங்கள் ஒன்பதாவது பாவத்தில், வேலை சம்பந்தப்பட்ட விசயங்கள் பத்தாவது பாவத்தில், வரவு சம்பந்தப்பட்ட விசயங்கள் பதினொன்றாம் பாவத்தில் மற்றும் செலவு சம்பந்தப்பட்ட விசயங்கள் பன்னிரண்டாம் பாவத்தில் தெரிய வரும். இதைத்தவிர வேறு சில விசயங்களையும் பாவங்களைப் பார்த்து அறியலாம்.
நீங்கள் உங்களது அல்லது உங்கள் குடும்பத்தினருடைய ஜாதகத்தைப் பார்த்திருப்பீர்கள். அதில் பன்னிரண்டு கட்டங்கள் இருக்கும். அந்த கட்டங்கள் தான் பன்னிரண்டு ராசிகள். அதில் பிறந்த நேரத்தில் வானத்தில் தெரிந்த படி கிரகங்களை எழுதி இருப்பார்கள். தென்னிந்தியாவில் எழுதும் முறையில் ராசிகள் நகராது, லக்னம் நகரும். வட இந்தியாவில் எழுதும் முறையில் பாவங்கள் நகராது, ராசிகள் நகரும். இதைத்தவிர இவைகளிள் வேறு எந்த வேறுபாடும் இல்லை.
ஒவ்வொரு ராசிக்கும் 30 அம்சங்கள் உள்ளன. ஒவ்வொரு அம்சத்துக்கும் அறுபது கலைகள் உள்ளன. ஒவ்வொரு கலைக்கும் அறுபது விகலைகள் உள்ளன. அதைக் கணக்கிடும் முறைப்படி கணக்கிட்டு ஜாதகத்தில் எழுதுவார்கள்.
உதாரணமாக தற்போது சூரியன் கடக ராசியில் பதினான்காவது அம்சத்தில் இருபத்தியோராம் கலையில் நாற்பத்தி ஐந்தாவது விகலையில் இருக்கிறார் என்று.
இன்னும் சில முக்கியமான விசயங்கள்:
ஜாதகத்தில் இராகு இருக்கும் இடத்திலிருந்து கேது ஏழாவது ராசியில் தான் இருப்பார். சூரியன் இருக்கும் இடத்திலிருந்து புதனும் சுக்கிரனும் இரண்டு ராசி பின்னர் அல்லது முன்னர் தான் இருப்பார்கள்.
ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அவரின் வாழ்க்கையில் வரும் சூழ்நிலைகளையும் அதன் பரிகாரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
ஹோலிகா
1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ
தமிழில் தலபுராணங்கள் - 1
பழிவாங்குதல் மற்றும் முறைப்படி கிடைக்கும் ஞானம்
பழிவாங்குதல் மற்றும் முறைப்படி கிடைக்கும் ஞானம்....
Click here to know more..வேதஸார சிவ ஸ்தோத்திரம்
பஶூனாம் பதிம் பாபநாஶம் பரேஶம் கஜேந்த்ரஸ்ய க்ருத்திம் வ....
Click here to know more..