ஒரு ஊரில் பத்திரன் என்கிற ஒரு பணக்காரன் இருந்தான். தங்கம் மற்றும் வெள்ளி விற்பது அவனது தொழில். ஊருக்குள் வேறு யாரும் நகைகள் விற்காததால் அவன் நகைகளை அதிக விலைக்கு விற்றுக் கொண்டிருந்தான்.
அதே ஊரில் சகாயமும் அவனது மனைவி துளசியும் இருந்தார்கள். அவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். துளசி, பத்திரனின் வீட்டில் வேலை செய்து மாதம் 30 ரூபாய் சம்பாதிப்பாள். சகாயம் காட்டிற்குப் போய் விரகு வெட்டி அதை வித்து ஒரு நாளிற்கு 2 ரூபாய் சம்பாதிப்பான்.
ஒரு நாள் துளசி, வேலையிலிருந்து வீட்டுக்குத் திரும்பும்போது, ஒரு அழகான கல்லைக் கண்டால். அவளுக்கு அது மிகவும் பிடித்ததால் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றாள்.
பத்திரன் ஒரு நாள் சகாயம் வீட்டு வழியாகச் சென்றுகொண்டிருந்தான். அப்பொழுது அவன் அந்த கல்லைப் பார்த்து அது ஒரு ரத்தினம் என்பதைத் தெரிந்து கொண்டான்.
அவன் சகாயத்தின் வீட்டிற்குச் சென்றான். சகாயமும் அவனை வரவேற்றான். பத்திரன் அந்த ரத்தினத்தைக் கையில் எடுத்துவிட்டு "ஊரில் என்னைக் காக்காக்கள் துரத்துகின்றன. நான் அதை எல்லாம் துரத்த இந்த கல்லை எடுத்துச் செல்கிறேன்" என்றான். சகாயம் “அந்த கல் என் மனைவி துளசிக்கு மிகவும் பிடித்த கல்” என்றான். பத்திரன் சகாயத்திற்கு 15 ரூபாய் கொடுக்கிறேன் என்றான். அதற்கு ஒற்றுக்கொண்ட சகாயம் அந்த கல்லைப் பத்திரனுக்குக் கோடுத்து விட்டான். அதை வாங்கிக் கொண்ட பத்திரன் அதை விற்றுவிடலாம் என்று நினைத்தான். பத்திரன் ரத்தினத்தை விற்கக் கடைக்குச் சென்று கொண்டிருந்த போது அதைக் கீழே போட்டு விட்டான். அந்தக் ரத்தினம் நொறுங்கி வட்டது. இதை நினைத்து பத்திரன் கவலைப்பட்டுக்கொண்டே வீடு திரும்பினான். இறுதியில் அந்த ரத்தினம் சகாயம் மற்றும் பத்திரன் இருவருக்கும் பயன்படவில்லை.
கதையின் கருத்து:
மற்றவர் பொருளை ஏமாற்றி எடுத்துக் கொள்ள நினைத்தாள், அந்த பொருள் நம்மிடம் இருக்காது.
அவருடன் ஒற்றுமையை அடைய உங்கள் உடல், மனம் மற்றும் அகங்காரத்தை முழுமையாக கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருமை நிலையில், கடவுள் மட்டுமே தன் மூலம் செயல்படுகிறார் என்பதை பக்தன் உணர்கிறான்.
மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கமின்மை தவிர்க்க முடியாத சமூக ஊழலாக உருவாகிறது. காலத்தை கடந்த சனாதன தர்மத்தின் நெறிகள்- உண்மை, அகிம்சை மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகும். இவை ஒரு நியாயமான மற்றும் இணக்கமான சமூகத்தை பராமரிக்க இன்றியமையாதது. இந்த நற்பண்புகளை அறிவித்தால் மட்டும் போதாது; தனிமனிதன் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கம் சமரசமாகும் போது, அதன் விளைவு சமூகத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. தனிப்பட்ட ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்தால், சமூகம் பேரழிவினை சந்திக்கும். சமுதாயத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், ஒவ்வொரு தனிமனிதனும் நன்நெறிகளை கடைபிடித்து, அசைக்க முடியாத நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
மகா பெரியவா மகிமை
பிராமணர்கள் ஏன் இடைவிடாமல் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்?
ஒரு முறை கடுமையான வறட்சியின் போது, கௌதம முனிவரின் ஆஸ்ரம�....
Click here to know more..லலிதா அபராத க்ஷமாபண ஸ்தோத்திரம்
கஞ்ஜமனோஹரபாதசலன்மணிநூபுரஹம்ʼஸவிராஜிதே கஞ்ஜபவாதிஸுரௌ....
Click here to know more..