யஜுர் வேதத்தில் சுக்ல யஜுர் வேதம் மற்றும் கிருஷ்ண யஜுர் வேதம் என இரு பிரிவுகள் உள்ளன. இதற்கிடையே உள்ள வேற்றுமைகள் என்ன? தென்னிந்தியவில் பரவலாக கிருஷ்ண யஜுர் வேதமும் வட இந்தியாவில் பரவலாக சுக்ல யஜுர் வேதமும் காணப்படுகிறது. ஏன் ஓரே வேதத்திற்கு இரு பிரிவுகள்?
வியாச மகரிஷிக்கு முன்னால் வேதங்கள் நான்கு பிரிவாக பிரிக்கப்படாமல் ஒன்றாகவே இருந்தன. எல்லா மந்திரங்களும் ஒரே பகுதியாக இருந்தது. கலியுகத்தில் மக்களுக்கு நினைவாற்றல் மற்றும் வேதத்தின் மீது விருப்பம் குறைவாகவும் மற்றும் அறிதலும், புரிதலும் ஆன்மீக நாட்டமும் குறைவாக இருக்கும் என்பதை உணர்ந்து வியாசர் வேதத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்தார். முழு வேதங்களையும் பாடம் படிப்பது என்பது தற்போதைய சூழலில் இயலாது.
வியாசர் வகுத்த நான்கு பகுதிகளுக்கு மூல நோக்கம் என்ன?
யாகத்தில் கூறப்பட வேண்டிய மந்திரங்கள் மற்றும் எல்லாவிதமான போற்றுதல் மந்திரங்கள். யாகத்தில் தேவதைகளுக்கு ஆஹுதி தரும்போது கூறப்பட வேண்டிய மந்திரங்கள். இவ்வகையான மந்திரங்களால் தொகுக்கப் பட்டதே ரிக் வேதம். (ஆஹுதி என்பது எந்த தேவதைக்கு யக்ஞம் செய்கிறோமோ அதற்கான மந்திரங்களை முதலில் முறையாகக் கூறி பின்னர் அக்னியினுள் பொருளை (நெய், சாதம், அரசமர கிளை போன்ற) போடுவது.
யாகத்தை நடத்துபவர்க்கு “ஹோதா” எனப் பெயர். இவரே மேற்கூறிய மந்திரங்களை உச்சரிப்பார். இந்த ரிக்வேத அறிஞர் பெரும்பாலும் அக்னியினுள் பொருட்களை சேர்க்க மாட்டார். அதை செய்பவருக்கு ‘அத்வர்யு’ எனப் பெயர். இவர் பெரும்பாலும் யஜுர் வேதம் படித்தவர். இதில் விளக்குகளும் உண்டு. சில சமயம் அத்வர்யுவே மந்திரங்கள் சொல்லி ஆஹுதி செய்வதும் உண்டு.
யாகம் என்பது மிக விரிவான செயல்பாடு. சில சமயம் சில நாட்கள், சில மாதங்கள், சில வருடங்கள் கூட யாகம் நடக்கும். இதில் பல செய்முறைகள் உள்ளன.
யாகசாலை அமைப்பது, வேத விற்பன்னர்களை பல செய்முறைகளுக்காக வரவழைப்பது, ஆஹுதிக்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்வது போன்றவற்றை அத்வர்யு மற்றும் அவரது யஜுர் வேதக் குழு ஏற்பாடு செய்யும்.
ஒவ்வொரு யாகத்திற்கும் மந்திரங்கள் உள்ளன. அனுஷ்டுப், த்ரிஷ்டுப் என உச்சாரனம் செய்வதற்கு ஏற்ப தேர்வு செய்யப்படும். இதற்கான செய்முறைகள் எல்லாம் யஜுர் வேதத்தின் மந்திரப் பகுதியில் உள்ளது. மந்திரங்களைத் தவிர எப்படி உச்சரித்து யாகம் செய்ய வேண்டும் என்பது பிராம்மணம் என்னும் பகுதியில் இருக்கும். ஒவ்வொரு வேதத்திலும் பிராம்மண பாகம் உண்டு. பிராம்மணம் என்பது செய்முறை கையேடு போன்றது. சாம வேதம் என்பது பாடல்கள் நிரம்பப் பெற்றது.
மந்திரங்கள் பொதுவாக ரிக் வேதத்திலிருந்து எடுக்கப் பட்டாலும் தேவதைகளை முதன்மையாகக் கூப்பிட பாடல் தொனியில் உச்சரிக்கும் சாமவேத அறிஞர்கள் “உத்காதா” என அழைக்கப் பெறுவர். யாகத்தின் அளவைப் பொறுத்து உத்காதாக்கள் இருப்பர். அதர்வ வேத்த்தின் அறிஞர் 'பிரம்மா' என்னும் நிலையில் யாகத்தில் வைக்கப் படுவார். பிரம்மா என்பவர் நான்கு வேதங்களிலும் விற்பன்னராக இருப்பார்.
யாகத்தில் ஏதாவது தவறுகள் இழைக்கப் படலாம். அதற்கான பிராயச்சித்தம் அதர்வ வேதத்தில் உரைக்கப் படுகின்றது. யக்ஞத்திற்கு அப்பாற்பட்ட செயல்களாக செல்வம், ஆரோக்கியம், வியாதிகளை குணப்படுத்துதல், சக்தி, அறிவு மற்றும் போரில் வெற்றி பெறத் தேவையான மந்திரங்கள் அதர்வ வேதத்தில் உள்ளன. இவ்வகையில் வேதத்தின் பகுதி நான்காகப் பிரக்கப் பட்டது.
நான்கு வேதங்களையும் வகைப் படுத்திய பின் தன்னுடைய நான்கு சீடர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். ரிக் வேதத்தை சுமந்து, யஜுர் வேதத்தை வைசம்பாயனர், சாம வேதத்தை ஜைமினி மற்றும் அதர்வ வேதத்தை பைலர் என்று நான்கு சீடர்களுக்கு கற்பித்தார்.
இப்பொழுது நாம் யஜுர் வேதத்தின் இரு பகுதிகளாக கிருஷ்ண யஜுர் வேதம் மற்றும் சுக்ல யஜுர் வேதம் ஏன் வந்தது என பார்ப்போம் -
வைசம்பாயனர் தான் யஜுர் வேதத்தை வியாசரிடமிருந்து முதல்முறை கற்றுக் கொண்டவர். அவரது சீடர் யாக்ஞவல்க்யர் என்பவர். இவர் வைசம்பாயனரிடமிருந்து யஜுர் வேத மந்திரங்களைக் கற்றுக் கொண்டார். ஆனால் எனோ இருவருக்குமிடையே குரு-சிஷ்ய பாவம் வேறுபட ஆரம்பித்தது. வைசம்பாயனர் ஒரு சமயம் கோபத்தில் யாக்ஞவல்கியரிடம் நான் கற்பித்த யஜுர் வேதத்தை திருப்பி கொடுத்து விடு என கூறினார். யாக்ஞவல்கியரின் உடலிலிருந்து யஜுர் வேதம் முழுவதும் தீப் பொறிகளாக வெளிவந்து எரியும் தீக்கட்டைகளாக தரையில் விழுந்தன. தன்னிடம் மீதமிருந்த சீடர்களை அந்த தீக் கட்டைகளை விழுங்கச் சொன்னார். சீடர்களும் தித்திரி பரவைகளாக மாறி அதை உட்கொண்டனர். எனவே ஒவ்வொரு சீடனும் ஒன்றோடொன்று கலந்து விட்ட சிதறிய வேதத்தின் தீத் துகள்களை சாப்பிட்டனர்.
அவ்வாறு சாப்பிட்ட பகுதிகளை வேதத்தின் காண்டங்களாக பிரித்துரைத்தனர். கிருஷ்ண யஜுர் வேதத்தில் அது போன்ற ஏழு காண்டங்கள் உள்ளன. தைத்திரீய சம்ஹிதை அதனால் எல்லாம் கலந்த ஒரு கலவையாக தொடர்ச்சியில்லாமல் போயிற்று. மந்திர பாகமும் பிராம்மண பாகம் கலந்து விட்டது. இப்போது உண்மையில் நன்கு விவரம் தெரிந்த ஒருவரால்தான் அதிலிருக்கும் தொடர் சம்பந்தத்தை உரைக்க இயலும். தைத்திரீய சம்ஹிதையைத் தவிர தற்போது மைத்ராயன சம்ஹிதை, காடக சம்ஹிதை, கபிஷ்டகட சம்ஹிதையும் உள்ளன.
இது நடந்த பிறகு யாக்ஞவல்க்ய ரிஷி தவம் செய்ய ஆரம்பித்தார். சூரியநாராயணனைத் தொழுது அவரிடமிருந்து யஜுர் வேதத்தை முழுமையாக முறையாக பெற்றார். இதுவே சுக்ல யஜுர் வேதம் என அழைக்கப்படுகிறது.
யாக்ஞவல்கியரின் தந்தை முனி வாஜசனி. எனவே யாக்ஞவல்க்யர் வாஜசனேயர் எனவும் அழைக்கப் பெறுகிறார். இவர் தொகுத்த சம்ஹிதை வாஜசனேயி சம்ஹிதை என அழைக்கப்படுகிறது.
யாக்ஞவல்க்யர் 15 சீடர்களைக் கொண்டிருந்தார். கண்வர், மதயந்தினர், சாபேயர், ஸ்வாபாயனீயர், காபாலர், பௌண்ட்ரவத்ஸர், ஆவடிகர், பரமாவடிகர், பராசர்யர், வைதேயர், வைனேயர், ஔதேயர், காலவர், பைஜவர் மற்றும் காத்யாயனீயர் எனப்படுவார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் சம்ஹிதையை தந்தருளியுள்ளனர். இதில் இரண்டு மட்டுமே தற்போது உள்ளன – மாத்யந்தின சம்ஹிதை மற்றும் காண்வ சம்ஹிதை.
சுக்ல யஜுர் வேதம் மற்றும் கிருஷ்ண யஜுர் வேதம் இரண்டுமே ஆத்வர்ய பிராயோகத்தைக் கொண்டதே. ஆனால் கிருஷ்ண யஜுர் வேதத்தின் அமைப்பு கலப்படமாக உள்ளது. சுக்ல யஜுர் வேதம் முறையாக அமைக்கப் பட்டிருப்பதால் கிருஷ்ண யஜுர் வேதத்தை பிறப்பால் அறிந்தவர்கள் உடனடியாக சுக்ல யஜுர் வேதத்திற்கு மாறுவது கடினமே.
'ஒருவன் தனக்கு உட்பட்ட வேதத்தை பின்பற்றுவதும் மற்றும் கற்பதே விதி.'
வேதம் அபௌருஷேய என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படும் காரணம், வேதத்திற்கு ஆசிரியர் இல்லை. வேதம் என்பது பல காலம் கடந்து முனிவர்களின் அறிவிலிருந்து மந்திரங்களாக வெளிப் பட்டதாகும்.
பக்தி என்பது பகவானுக்கு ஒரு பிரத்யேக ஆன்மீக அன்பு. இது பக்தி மற்றும் சுயசரணாகதியின் பாதை. பக்தர்கள் பகவானிடம் தங்களைச் சரணடைகிறார்கள், பகவான் அவர்களின் துன்பங்கள் அனைத்தையும் நீக்குகிறார். பக்தர்கள், பகவானை மகிழ்விப்பதற்காக, தன்னலமற்ற சேவையாக பகவானை நோக்கி தங்கள் செயல்பாடுகளை செலுத்துகிறார்கள். பக்தியின் பாதை அறிவு மற்றும் சுய-உணர்தலுக்கு வழிவகுக்கிறது. துக்கம், அறியாமை, பயம் ஆகியவை பக்தியால் நீங்கும்.
வாய் பேசாத கடவுள்
நிலம் தொடர்பான வியாபாரத்தில் வெற்றிக்கான மந்திரம்
க்ஷேத்ரபாலாய வித்³மஹே க்ஷேத்ரஸ்தி²தாய தீ⁴மஹி தன்ன꞉ க்ஷ....
Click here to know more..காமாட்சி அஷ்டக ஸ்தோத்திரம்
ஶ்ரீகாஞ்சீபுரவாஸினீம் பகவதீம் ஶ்ரீசக்ரமத்யே ஸ்திதாம்....
Click here to know more..