அதிதி தக்ஷ பிரஜாபதியின் மகள்களில் ஒருவர். காஷ்யப பிரஜாபதி அவள் கணவன். பன்னிரண்டு ஆதித்யர்களும் அவளுடைய மகன்கள். மகாவிஷ்ணுவும் தன் மகனாக - வாமனனாக அவதாரம் எடுத்தார். கிருஷ்ணரின் தாய் தேவகி அதிதியின் அவதாரம்.
பகவான் கிருஷ்ணர் இப்பூவுலகில் இருந்து வைகுந்தம் எழுந்தருளும் 'மஹாப்ரஸ்தானம்' , மஹாபாரதத்தில் விளக்கப்பட்டிருக்கிறது. பாண்டவர்களை வழிநடத்துதல், ஸ்ரீமத் பகவத் கீதையை உலகிற்களித்தல் போன்ற தனது தெய்வீகப் பணிகளை இவ்வுலகில் நிறைவேற்றியபின் ஸ்ரீக்ருஷ்ணர் தனது அவதாரத்தை நிறைவு செய்ய ஆயத்தமானார். ஒரு மரத்தடியில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், ஒரு வேடன் இவரது பாதத்தை ஒரு மானின் தலை என்றெண்ணி அதன்மீது அம்பு எய்தான்.உடனே தன் தவறை உணர்ந்து க்ருஷ்ணரிடம் விரைந்தான். அவர், வேடனைச் சமாதானம் செய்து அம்புக்காயத்தை ஏற்றுக் கொண்டார். சோதிட ரீதியான மற்றும் மறைநூல்களின் கணிப்பிற்கு இணங்கும் வகையில் க்ருஷ்ணர் இவ்விதம் நிகழ்த்தினார். உலகின் ஏற்றத்தாழ்வுகளையும் உலகியலின் யதார்த்தத்தையும் ஏற்கும் வகையில் க்ருஷ்ணர் இத்துன்பத்தை ஏற்றுக் கொண்டார். ஆத்மா அழிவற்றது என்பதையும் , சரீரம் நிலையற்றது என்பதையும் பற்றற்ற தன்மையின் அவசியத்தையும் உணர்த்தும் வகையில் க்ருஷ்ணரின் அவதார பூர்த்தி அமைந்தது. வேடனின் குற்றத்தைப் பொறுத்துக் கொண்டது, க்ருஷ்ணனின் இரக்க குணத்தையும் , மன்னித்தலையும் , இறைவனுக்கே உரிய பெருங்கருணையையும் எடுத்துக் காட்டியது. இந்நிகழ்வு க்ருஷ்ணருடைய அவதார பூர்த்தியையும், அவர் தனது நித்யவாசஸ்தலமாகிய வைகுந்தத்திற்கு மீண்டும் எழுந்தருளியதையும் விளக்கியது.
ௐ ஹ்ரீம்ʼ யோகி³னி யோகி³னி யோகே³ஶ்வரி யோகே³ஶ்வரி யோக³ப⁴யங்கரி ஸகலஸ்தா²வரஜங்க³மஸ்ய முக²ஹ்ருʼத³யம்ʼ மம வஶமாகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா....
ௐ ஹ்ரீம்ʼ யோகி³னி யோகி³னி யோகே³ஶ்வரி யோகே³ஶ்வரி யோக³ப⁴யங்கரி ஸகலஸ்தா²வரஜங்க³மஸ்ய முக²ஹ்ருʼத³யம்ʼ மம வஶமாகர்ஷய ஆகர்ஷய ஸ்வாஹா