பிரஹலாதனின் கூற்றுப்படி, பக்தியின் ஒன்பது வடிவங்கள் - 1. ஶ்ரவணம் - பகவானின் மகிமையைக் கேட்பது (எ.கா. பரீக்ஷித்) 2. கீர்த்தனம் - அவரது மகிமையைப் பாடுவது (எ.கா. சுகதேவன்) 3. ஸ்மரணம் - அவரைத் தொடர்ந்து நினைவு செய்தல் (எ.கா. பிரஹலாதன்) 4. பாதசெவனம் - அவரது பாதங்களை சேவித்தல் (எ.கா. லக்ஷ்மி) 5. அர்ச்சனை - உடல் வழிபாடு (எ.கா. பிருது) 6. வந்தனம் - நமஸ்காரங்கள் (எ.கா. அக்ரூரன்) 7. தாஸ்யம் - உங்களை பகவானின் அடியாராகக் கருதுதல் (எ.கா. அனுமான்) 8. சக்யம் - அவரை உங்கள் நண்பராகக் கருதுவது (எ.கா. அர்ஜுனன்) 9. ஆத்மநிவேதனம் - பகவானிடம் முழுமையாக சரணடைதல் (எ.கா. பலி மன்னன்).
ரிஷி என்பவர் முழு ஞானம் அடைந்தவர் ஆவார். அவரின் ஞானத்தின் வெளிப்பாடே மந்திரங்கள் ஆகும். முனிவர் என்பவர் ஞானம், புத்திக்கூர்மை மற்றும் நிலையான புத்தி உள்ளவர் ஆவார். முனிவர்களும் தாம் கூறும் கூற்றில் நிதானம் உள்ளவர்கள் ஆவார்.
ௐ ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் த⁴னம் குரு குரு ஸ்வாஹா .....
ௐ ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் த⁴னம் குரு குரு ஸ்வாஹா .