பால்வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவச மிக வாகுதே (கண்ணா)
நீலக்கடல் போலும் நிறத்தழகா கண்ணா
எந்தன் நெஞ்சம் குடி கொண்டு
அன்று முதல் இன்றும்
எந்த பொருள் கண்டும்
சிந்தனை செல்லாதொழிய (பால்வடியும்)
வான முகட்டில் சட்று
மனம் வந்து நோக்கினும்
(உன்) மோன முகம் வந்து தோனுதே
தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
(உன்) சிரித்த முகம் வந்து காணுதே
கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் (அங்கு)
உன் கான குழலோசை மயக்குதே
கருத்த குழலொடு நிறுத்த மயிலிற
கிறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும்
நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை குழைய வரும் இசையில்
குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு
நளினமான சலனத்திலே
காளிங்கன் சிரத்திலே
கதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நினைவினோடு
பிறவி பிறவி தோறும்
கனிந்துருக வரம் தருக பரம் கருணை
(பால்வடியும்)

 

Paal Vadiyum Mugam Tamil Krishna Song

 

168.8K
25.3K

Comments

Security Code

98658

finger point right
தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

அற்புதமான வலைத்தளம் 💫 -கார்த்திக்

மிகச்சிறந்த இணையதளம் -லோகநாதன்

மிகச்சிறந்த வெப்ஸைட் -பார்வதி ராஜசேகரன்

Read more comments

Knowledge Bank

சப்தரிஷிகள் யார்?

சப்தரிஷிகள் ஏழு முக்கிய ரிஷிகள். இந்தக் குழுவின் உறுப்பினர்கள் ஒவ்வொரு மன்வந்தரத்தையும் மாற்றுகிறார்கள். வேத வானியலின் படி, சப்தரிஷி-மண்டலம் அல்லது விண்மீன் குழுவின் உறுப்பினர்கள் - ஆங்கிரஸ், அத்ரி, க்ரது, புலஹா, புலஸ்திய, மரிச்சி மற்றும் வசிஷ்டர்.

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா மற்றும் ஷ்ரேயாவின் வித்தியாசத்தைப் பற்றி என்ன சொல்லுகிறார்?

கடோபநிஷத்தில், யமன் ப்ரேயா (பிரியமானது, இனிமையானது) மற்றும் ஷ்ரேயா (நல்லது, பயனுள்ளது) இவ்விரண்டின் வித்தியாசத்தை விளக்குகிறார். ஷ்ரேயாவை தேர்வு செய்வது நன்மை மற்றும் உயர் இலக்கினை அடைய வழிவகுக்கும். இதற்குப் பதிலாக, ப்ரேயாவைத் தேர்வு செய்வது என்பது தற்காலிகமான இன்பங்களில் ஈடுபடுவது. இது இலக்கினை மறப்பதற்கும் காரணமாகிவிடும். ஞானமிக்கவர்கள் ப்ரேயாவிற்குப் பதிலாக ஷ்ரேயாவை தேர்வுசெய்வர். ஷ்ரேயாவைத் தேர்வு செய்வது, பெறுவதற்கு கடினமான நித்திய ஞானம் மற்றும் அறிவை அடைவதற்கான நாட்டம் எனக் கூறப்படுகிறது. மற்றொரு பக்கம், ப்ரேயாவைத் தேடுவது என்பது எளிமையானது‌‌, தற்காலிகமானது. அறியாமை மற்றும் மாயையில் இருக்க காரணமாகிறது. யமன் தற்காலிகமான இன்பங்களில் திருப்தி அடைவதை விட நிலையான நன்மையை தேடுவதற்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்

Quiz

புகழ் பெற்ற கடஸ் ராஜ் சிவன் கோயில் எந்த தேசத்தில் இருக்கிறது?

Recommended for you

தடைகளை நீக்கும் தசபுஜ கணபதி மந்திரம்

தடைகளை நீக்கும் தசபுஜ கணபதி மந்திரம்

த³ஶபு⁴ஜாய வித்³மஹே வல்லபே⁴ஶாய தீ⁴மஹி தன்னோ த³ந்தீ ப்ரசோ....

Click here to know more..

சபரிமலையை நோக்கி மாலை அணியும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்

சபரிமலையை நோக்கி மாலை அணியும் போது ஜபிக்க வேண்டிய மந்திரம்

மாலையிடும் போது இந்த மந்திரம் சொல்லுங்கள். ஜ்ஞானமுத்³ர�....

Click here to know more..

நவக்கிரக நமஸ்கார ஸ்தோத்திரம்

நவக்கிரக நமஸ்கார ஸ்தோத்திரம்

ஜ்யோதிர்மண்டலமத்யகம் கதஹரம் லோகைகபாஸ்வன்மணிம் மேஷோச்....

Click here to know more..