அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
நிலை பெயராது சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா
என் மனம் அலைபாயுதே கண்ணா
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே
திக்கை நோக்கி என் இரு புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு
உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கனை கடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையிரு கழலெனக் அளித்தவா
கதறி மனமுருகி நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ?
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள்
போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே கண்ணா
சிவபெருமான் தீவிர தபஸ் செய்து கொண்டிருந்தார். அவரது உடல் வெப்பமடைந்து, அவரது வியர்வையிலிருந்து, நர்மதா நதி உருவானது. நர்மதை சிவனின் மகளாகக் கருதப்படுகிறாள்.
பக்தி என்பது புத்தியின் விஷயம் அல்ல, இதயம்; அது தெய்வீகத்திற்கான ஆன்மாவின் ஏக்கம்
திரிபுர சுந்தரி மந்திரத்தின் மூலம் வலிமையையும் அருளையும் பெறுங்கள்
திரிபுர சுந்தரி மந்திரத்தின் மூலம் வலிமையையும் அருளைய�....
Click here to know more..அறிவுக்கான விஷ்ணு மந்திரம்
ௐ பி³ந்த்³வாத்மனே நம꞉ ௐ நாதா³த்மனே நம꞉ ௐ அந்தராத்மனே நம�....
Click here to know more..சிவ ஆத்மார்ப்பண ஸ்துதி
கஸ்தே போத்தும்ʼ ப்ரபவதி பரம்ʼ தேவதேவ ப்ரபாவம்ʼ யஸ்மாதித....
Click here to know more..