இருமுடி தாங்கி ஒரு மனதாகி
குருவெனவே வந்தோம்
இருவினைத் தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியைக் காண வந்தோம்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியை
நெய் அபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூடி கொண்டு
ஐயனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கு சென்றிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
கார்த்திகை மாதம் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே
உனைப் பார்க்க வேண்டியே தவம் இருந்து
இருமுடி எடுத்து எரிமேலி வந்து ஒரு மனதாகிப் பேட்டைத் துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது ஐயனின் அருள் மலை ஏறிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
அழுதை ஏற்றம் ஏறும் போது ஹரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார் ஐயன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம் கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்த உடனே திருநதி பம்பையை கண்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
கங்கை நதிப் போல் புண்ணிய நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார்
சஞ்சலமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவ பாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருட்
காவலனாய் இருப்பார்
தேக பலம் தா பாத பலம் தா
தேக பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார்
நல்ல பாதையைக் காட்டிடுவார்
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே
சபரி பீடமே வந்திடுவார் சபரி
அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னி மார்களும் சரத்தினைப் போட்டு வணங்கிடுவார்
சபரி மலைதனில் நெருங்கிடுவார்
பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதியென்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனைத் துதிக்கையிலே
தன்னையே மறந்திடுவார்
பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
ஐயப்போ சுவாமியே

 

Pallikkattu Sabarimalaikku By Veeramani Raju

 

137.2K
20.6K

Comments

Security Code

94343

finger point right
சனாதன தர்மத்தின் அறிவுப் பொக்கிஷம் 📚 -அருண்

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

தனித்தன்மை வாய்ந்த இணையதளம் 🌟 -ஆனந்தி

வேததாராவினால் கிடைத்த நேர்மறை மற்றும் வளர்ச்சிக்கு நன்றி. 🙏🏻 -Shankar

அறிவு வளர்க்கும் இணையதளம் 🌱 -சித்ரா

Read more comments

Knowledge Bank

மந்திரத்தைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவம்

ஒரு மந்திரத்தின் அர்த்தத்தையும், சாராம்சத்தையும் அறியாத ஒருவர், அதை ஆயிரம் கோடி முறை ஜபித்தாலும், அதன் மூலம் வெற்றியை அடைய முடியாது. மந்திரத்தின் பொருளைப் புரிந்துகொள்வது முக்கியம். மந்திரத்தின் சாராம்சத்தை அறிவது மிகவும் முக்கியம். இந்த அறிவு இல்லாமல், வெறும் மந்திரம் வேலை செய்யாது. திரும்பத் திரும்ப உச்சரிப்பது கூட பலனைத் தராது. வெற்றிக்கு புரிதலும் விழிப்புணர்வும் தேவை.

ரிக்வேதம் மற்றும் ஒளியின் வேகம்

அறியப்பட்ட மிகப் பழமையான நூல்களில் ஒன்றான ரிக்வேதத்தில் ஒளியின் வேகத்தைப் பற்றிப் பேசும் ஒரு பாடல் (1.50.4) உள்ளது. சூரிய ஒளி அரை நிமிடத்தில் 2,202 யோஜனைகள் பயணிக்கிறது என்று அது குறிப்பிடுகிறது. இதை நவீன அளவீடுகளுக்கு மொழிபெயர்த்தால், இது குறிப்பிடத்தக்க வகையில் ஒளியின் வேகத்தை தோராயமாக மதிப்பிடுகிறது.

Quiz

அருணனை சூரியனின் தேருக்கு முன்னால் வைத்தது யார்?

Recommended for you

தில்லை வாழ் அந்தணர்

தில்லை வாழ் அந்தணர்

தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திரு நீ�....

Click here to know more..

முருகன் மந்திரம்

முருகன் மந்திரம்

முருகனின் மூல மந்திரம், மாலா மந்திரம், காயத்ரி மந்திரம்,....

Click here to know more..

மகோதர ஸ்துதி

மகோதர ஸ்துதி

ஸர்வேஷாம்ʼ மோஹகர்த்ரே வை பக்தேப்ய꞉ ஸுகதாயினே .....

Click here to know more..