புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே எங்கள்
மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே எங்கள்
பரந்தாமன் மெய்யழகை பாடுங்களேன்
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே எங்கள்
ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன
எங்கள் ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி புகழ் பாடுங்களேன்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன் அந்த
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் அந்த
ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
அந்த ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
பாஞ்சாலி புகழ் காக்க தன் கை கொடுத்தான் அந்த
பாரதப்போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கை கொடுத்தான் நாம்
படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
நாம் படிப்பதற்கு கீதை எனும் பாடம் கொடுத்தான்
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்
1.எளிமைக்காக வேதத்தைக் கற்றுக்கொல்ல . 2. யாகங்களில் அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் வேதம் பிரிக்கப்பட்டது. வேத வியாசர் யாகம் செய்வதற்கு பயனுள்ள வேதங்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பிரித்து தொகுத்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு யக்ஞமாத்ரிகா வேதம் என்று பெயர்.
பலராமரும் ருக்மியும் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனின் திருமணத்தில் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். ருக்மி ஏமாற்றி தன்னை வெற்றியாளராக அறிவித்தார். பலராமர் ருக்மியால் கேலி செய்யப்பட்டார். பலராமர் ஆத்திரத்தில் ருக்மியைக் கொன்றார்.