மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்
போக வேண்டும் தாயே
தடை சொல்லாதே நீயே
காய்ச்சின பாலு தரேன் கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன் வெய்யிலிலே போக வேண்டாம்
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)
காய்ச்சின பாலும் வேண்டாம் கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து ஒரு நொடியில் திரும்பிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)
யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)
கள்வனுக்கோர் கள்வன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் ஆக்கிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)
கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)
காட்டு மிருகங்கள் எல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டம் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)
பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே நீ போகவேண்டாம் சொன்னேன்)
பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
(போக வேண்டும் தாயே தடை சொல்லாதே நீயே)
இந்து மதத்தில், குளிக்காமல் உணவு சாப்பிடுவது தடை செய்யப்படுகிறது. குளிப்பு உடலையும் மனதையும் தூய்மைப்படுத்துகிறது. இது சுத்தத்துடன் உணவு சாப்பிட உங்களைத் தயாராக்குகிறது. குளிக்காமல் சாப்பிடுவது அசுத்தமாகக் கருதப்படுகிறது. இது ஆன்மிக பழக்கவழக்கங்களைச் சிதைக்கிறது. குளிப்பு உடலைச் செயல்படுத்தி ஜீரணத்தையும் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. குளிக்காமல் சாப்பிடுவது இந்த இயற்கை செயல்முறையைத் தடுக்கும். உணவு புனிதமானது; அதை மதிக்க வேண்டும். சுத்தமில்லாத நிலையில் சாப்பிடுவது மரியாதையற்றது. இந்த பழக்கத்தைப் பின்பற்றினால், நீங்கள் சுத்தத்தையும் ஆரோக்கியத்தையும் மதிக்கிறீர்கள். இது உடல் ஆரோக்கியத்தையும் ஆன்மீகத்தையும் இணைக்கிறது. இந்த எளிய பழக்கம் இந்து வாழ்வின் முழுமையான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. உடலையும் உணவையும் மதிப்பது மிக மிக அவசியம்.
வேதம் அபௌருஷேய என்று கூறப்படுகிறது. அவ்வாறு கூறப்படும் காரணம், வேதத்திற்கு ஆசிரியர் இல்லை. வேதம் என்பது பல காலம் கடந்து முனிவர்களின் அறிவிலிருந்து மந்திரங்களாக வெளிப் பட்டதாகும்.
விஷ்ணுவின் தத்துவ மந்திரங்கள்
ௐ யம் நம꞉ பராய ப்ருதி²வ்யாத்மனே நம꞉ ௐணாம் நம꞉ பராய அபா³த�....
Click here to know more..கரம்பிகைக்கு ப்ரஹ்மா வரம் கொடுக்கிறார்
கந்த சஷ்டி கவசம்
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில். பதிப�....
Click here to know more..