மருதமலை மாமணியே முருகையா பாடல்

 

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை.
மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே. முருகய்யா
மருதமலை மாமணியே. முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா. ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.

மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

 

95.6K
14.3K

Comments

Security Code

27487

finger point right
நம் ஆன்மீக பூமியில் பக்தி பெருக்கெடுத்து இளைய தலையினரை ஞான மார்க்கத்திற்கு கொண்டு செல்லும் அற்புத தளம்..ஆலமரமாய் த்தலைக்கட்டும். -User_smij5q

இறை வேற ஆற்றலை ஊட்டிருக்கும் இணையதளம் -User_smavhv

எல்லோருக்கும் உதவிகரமான இணையதளம் 🤗 -கமலா

மகிழ்ச்சியளிக்கும் வலைத்தளம் 😊 -பாஸ்கரன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 -sivaramakrishna sharma

Read more comments

Knowledge Bank

மாயைகளுக்கு அப்பால் பார்ப்பது

வாழ்க்கையில், நம் அனுமானம் மற்றும் கருத்துக்களை கலங்கடிக்கும் மாயைகளை நாம் அடிக்கடி எதிர்கொள்கிறோம். இந்த மாயைகள் பல வடிவங்களில் வரலாம். அவை தவறான தகவல்கள், தவறான நம்பிக்கைகள் அல்லது நமது உண்மையான நோக்கத்திலிருந்து நம்மைத் திசைதிருப்பும் கவனச்சிதறல்கள் ஆகியவையாக இருக்கலாம். பகுத்தறிவையும் ஞானத்தையும் வளர்ப்பது முக்கியம். விழிப்புடன் இருங்கள். உங்களுக்கு தெரிவிக்கப்படுவது எதையும் கேள்வி கேளுங்கள், பிரகாசிக்கும் அனைத்தும் தங்கம் அல்ல என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உண்மை மற்றும் பொய்யை வேறுபடுத்தும் திறன் மிக சக்திவாய்ந்த கருவியாகும். உங்களுக்குள் தெளிவைத் தேடுவதன் மூலமும், தெய்வத்தின் தொடர்பைப் பேணுவதன் மூலமும், நீங்கள் வாழ்க்கையின் சிக்கல்களை நம்பிக்கையுடனும் நுண்ணறிவுடனும் எதிர்கொள்ளலாம். உங்கள் சவால்களை தெளிவு பெறுவதற்கான வாய்ப்பாக கருதுங்கள். உங்களுக்குள் இருக்கும் தெளிவு எனும் ஒளி உங்களை உண்மை மற்றும் நிறைவை நோக்கி வழிநடத்தும். ஞானம் என்பது மாயையை விலக்கிப் பார்ப்பதும், அதன் சாராம்சத்தைப் புரிந்துகொள்வதும் ஆகும். இந்த பிரம்மாண்ட பிரபஞ்சத்தில் நமது திறனை உணர்ந்து, அதனை செவ்வனே பயன்படுத்துவதே உண்மையான ஞானம்.

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

Quiz

ராஹு க்ரஹத்தின் கோவில் எங்கிருக்கிறது?

Recommended for you

செல்வம் பெருக லக்ஷ்மி தேவி மந்திரம்

செல்வம் பெருக லக்ஷ்மி தேவி மந்திரம்

அமலகமலஸம்ஸ்தா² தத்³ரஜபுஞ்ஜவர்ணா கரகமலத்⁴ருதேஷ்டா(அ)பீ....

Click here to know more..

செல்வம் மற்றும் செழிப்புக்கான வாஸ்து தேவதை மந்திரம்

செல்வம் மற்றும் செழிப்புக்கான வாஸ்து தேவதை மந்திரம்

கே³ஹாதி³ஶோப⁴னகரம்ʼ ஸ்த²லதே³வதாக்²யம்ʼ ஸஞ்ஜாதமீஶ்வரதனு�....

Click here to know more..

கனாதிப பஞ்ச ரத்ன ஸ்தோத்திரம்

கனாதிப பஞ்ச ரத்ன ஸ்தோத்திரம்

அஶேஷகர்மஸாக்ஷிணம் மஹாகணேஶமீஶ்வரம் ஸுரூபமாதிஸேவிதம் த....

Click here to know more..