துர்தமன் விஸ்வவசு என்ற கந்தர்வனின் மகன். ஒருமுறை, அவர் ஆயிரக்கணக்கான மனைவிகளுடன் கைலாசத்திற்கு அருகிலுள்ள ஒரு ஏரியில் மகிழ்ந்து கொண்டிருந்தார். அங்கு தவம் செய்து கொண்டிருந்த வசிஷ்ட முனிவர் எரிச்சல் அடைந்து சாபமிட்டார். இதன் விளைவாக, அவர் ஒரு ராட்சசன் ஆனார். அவரது மனைவிகள் வசிஷ்டரிடம் கருணை கோரினர். மகாவிஷ்ணுவின் அருளால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு துர்தமன் மீண்டும் கந்தர்வனாக மாறுவார் என்று வசிஷ்டர் கூறினார். பின்னர், துர்தமன் காலவ முனியை விழுங்க முயன்றபோது, மஹா விஷ்ணுவால் தலை துண்டிக்கப்பட்டு, தனது உண்மையான வடிவத்தை மீண்டும் பெற்றார். எந்த ஒரு செயலுக்கும் விளைவு உண்டு. தவறை உணர்ந்து சரண் அடைந்தால், இரக்கம் மற்றும் தெய்வீக அருளால் மீட்பு சாத்தியம் என்பது கதையின் கருத்து
பரத்வாஜ முனிவர் வைமானிக சாஸ்திரம் பற்றிய புத்தகத்தை எழுதியவர்.
சூரியபகவானுக்கு கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதை ஏற்றுவதால் அந்தந்த பருவ காலத்தில் ஏற்படும் நோய்கள் நம் உடலைப் பாதிக்காது. எல்லா பாவங்களும் நீங்கும். எந்தவிதமான எதிர்ப்புகளை�....
சூரியபகவானுக்கு கார்த்திகை மாதத்தில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இதை ஏற்றுவதால் அந்தந்த பருவ காலத்தில் ஏற்படும் நோய்கள் நம் உடலைப் பாதிக்காது.
எல்லா பாவங்களும் நீங்கும்.
எந்தவிதமான எதிர்ப்புகளையும் எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.
முகம் சூரியனைப்போலப் பிரகாசமாகி விடும்.
முன்னொரு காலத்தில் நாக ஷர்மா என்ற ஒருவர் மாகிஷ்மதியில் வளர்ந்து வந்தார்.
அவருக்கு நூறு மகன்கள் இருந்தார்கள்.
அவருடைய கடைசி மகனின் பெயர் பத்திரன்.
அவன் மிகவும் ஞானம் மிகுந்தவராக இருந்தான்.
பத்திரன் தினந்தோறும் சூரிய பகவான் கோவிலுக்குச் சென்று விளக்கேற்றுவான்.
ஒரு நாள் மற்ற அண்ணன்மார்கள் அனைவரும் பத்திரணிடம் கேட்டார்கள் -
நீ சுவாமிக்கு அபிஷேகம் அர்ச்சனை நைவேத்யம் இது ஒன்றும் செய்வதில்லை.
தினம் ஒரு தீபத்தை மட்டும் ஏற்றுகிறாய்.
ஆனாலும் நீ இதனால் நிறைய நன்மைகளைப் பெறுகிறாய்.
இதை என்க எங்களால் காண முடிகிறது கண்ணெதிரே தெரிகிறது.
இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன என்று கேட்டனர்.
பத்திரன் கூறினார்-
இது என்னுடைய பூர்வ ஜென்மத்தில் நடந்த கதை.
ராஜா இஷ்வாகு சூரிய பகவானுக்கு, சரயு நதிக்கரையில் ஒரு கோவிலைக் கட்டி வைத்திருந்தார்.
அங்கு நிறைய காவலாளிகள் இருந்தனர்.
அந்த சமயத்தில் நான் ஒரு பிச்சைக்காரனாக அங்கு இருந்தேன்.
என்னுடைய உடம்பில் நிறைய நோய்கள் இருந்தது.
எனக்குச் சரியாக சாப்பாடு கூட கிடைக்காமலிருந்தது.
மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் என்றான்.
அப்போது ஒருநாள் நான் அந்த கோவிலில் இருக்கும் சூரிய பகவானின் ஆபரணங்களைக் களவாட வேண்டும் என்று நினைத்தேன்.
அதற்காகக் கோவிலின் உள் சென்று ஒளிந்து கொண்டேன்.
காவலாளிகள் அனைவரும் உறங்கிய பிறகு சன்னிதியின் அருகில் சென்றேன்.
அங்கு இருள் சூழ்ந்திருந்தது.
அங்கு எனக்குக் கண் தெரிவதற்காக ஒரு தீபத்தை ஏற்றி வைத்தேன்.
அப்பொழுது ஒரு காவலாளி எழுந்து யார் அங்கே என்று கேட்டான்.
அவனின் சப்தத்தைக் கேட்டு நான் அப்படியே விழுந்து அங்கேயே உயிர் இழந்தேன்.
அப்பொழுது சூரியபகவானின் கணங்கள் வந்து என்னைச் சூரியபகவானின் உலகத்திற்குக் கூட்டிச் சென்றது.
அங்கு நான் நிறைய காலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தேன்.
நான் ஒரு கெட்ட எண்ணத்துடன் தான் தீபம் ஏற்றி வைத்தேன்.
ஆனாலும் கருணை உள்ளம் கொண்ட சூரிய பகவான் என் மீது கருணை கொண்டு சூரிய உலகத்தில் சந்தோஷமாக வாழ வைத்தார்.
ஒரு விளக்கு ஏற்றிய காரணத்தினால் சூரிய பகவான் என்னைப் பாவம் செய்யவும் விடவில்லை.
என்னை நரகத்திற்கும் அனுப்பவில்லை.
ஆகையால் தான் அவர் தினமும் சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி வைக்கிறார் என்று கூறினார்.
இவ்வாறாகத் தினமும் சூரிய பகவானுக்கு விளக்கேற்றி வைப்பவர்களை அவர் எல்லா சுகங்களையும் கொடுத்துக் காப்பாற்றுவார்.
தினமும் முடியாமல் போனாலும் கார்த்திகை மாதம் முழுவதும் அனைவரும் சூரிய பகவானுக்கு விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
அப்பொழுது சூரியபகவான் அனைவருக்கும் ஒரு கஷ்டமும் வரவிடாமல் சுகங்களைத் தந்து காப்பாற்றுவார்.
சிவ புராணத்தின் மாஹாத்ம்யம்
அனைத்து புராணங்களை விட மங்களகரமானதும் கல்யாணகரமனதும் �....
Click here to know more..இந்த மந்திரங்களை உச்சரித்து 108 மலர்களை சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கவும்
ௐ ஆதி³த்யாய நம꞉, ௐ ஸவித்ரே நம꞉, ௐ ஸூர்யாய நம꞉, ௐ அர்காய நம꞉,....
Click here to know more..கணப ஸ்தவம்
பாஶாங்குஶாபயவரான் ததானம் கஞ்ஜஹஸ்தயா. பத்ன்யாஶ்லிஷ்டம�....
Click here to know more..