பாரத சமுதாயம் வாழ்கவே - வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத்துக் கொருபுதுமை - வாழ்க
(பாரத சமுதாயம் வாழ்கவே ஜய ஜய ...)
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை யினியுண்டோ ?
புலனில் வாழ்க்கை யினியுண்டோ ? - நாமிழந்த
வாழ்க்கை யினியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு -
கனியுங் கிழங்குந் தான்யங்களும்
கணக்கின்றித்தரு நாடு - (இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றி தரு நாடு )
மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்க மினியுண்டோ ?
இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளுங் காப்போம்
தனி யொருவனுக் குணவில்லை எனில்
ஜகத்தினை அழித் திடுவோம் (வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே )
(ஜய ஜய ...)
எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்
எல்லோரும் அமரநிலை யெய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - (ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம், ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்) - இங்கு
மனித ருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ ?
எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்தியா மக்கள்
எல்லோரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க -
பாரத சமுதாயம் வாழ்கவே
(ஜய ... ஜய)
மகாதேவர் அகஸ்திய முனிவருக்கு பிரம்மாஸ்திரம் கொடுத்தார். அகஸ்தியர் அதை அக்னிவேசரிடம் கொடுத்தார். அக்னிவேசர் துரோணரிடம் கொடுத்தார். துரோணர் அர்ஜுனனிடம் கொடுத்தார்.
ஒரு மனிதன் மூன்று ருணங்களுடன் (கடன்களுடன்) பிறக்கிறான்: ரிஷி ருணம் (முனிவர்களுக்கு கடன்), பித்ரு ருணம் (முன்னோருக்கு கடன்), மற்றும் தேவ ருணம் (தெய்வங்களுக்கு கடன்). இந்தக் கடன்களிலிருந்து விடுபட, வேதங்கள் தினசரி கடமைகளை பரிந்துரைக்கின்றன. உடல் சுத்திகரிப்பு, சந்தியாவந்தனம் (தினசரி பிரார்த்தனை), தர்ப்பணம் (மூதாதையர்களுக்கான சடங்குகள்), தெய்வ வழிபாடு, பிற தினசரி சடங்குகள் மற்றும் வேதங்களைப் படிப்பது ஆகியவை இதில் அடங்கும். உடல் சுத்திகரிப்பு மூலம் தூய்மையைப் பேணுதல், சந்தியாவந்தனம் மூலம் தினசரி பிரார்த்தனை, தர்ப்பணத்தின் மூலம் முன்னோர்களை நினைவு கூறுதல், தெய்வங்களைத் தவறாமல் வணங்குதல், பிற பரிந்துரைக்கப்பட்ட தினசரி சடங்குகளைப் பின்பற்றுதல் மற்றும் வேதங்களைப் படிப்பதன் மூலம் ஆன்மீக அறிவைப் பெறுதல். இந்த செயல்களை கடைபிடிப்பதன் மூலம், நமது ஆன்மீக கடமைகளை நிறைவேற்றுகிறோம்.