தெய்வீகத்துடன் தொடர்புகொள்வதற்கும் கடவுளின் இருப்பை அனுபவிப்பதற்கும் பூஜை செய்யப்படுகிறது. இது ஆன்மாவிற்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தடையை நீக்குகிறது, கடவுளின் ஒளி தடையின்றி பிரகாசிக்க அனுமதிக்கிறது. பூஜையின் மூலம், நம் வாழ்க்கையை கடவுளின் சித்தத்துடன் சீரமைத்து, நம் உடலையும் செயல்களையும் தெய்வீக நோக்கத்தின் கருவிகளாக மாற்றுகிறோம். இந்தப் பயிற்சியானது கடவுளின் விளையாட்டுச் செயல்களின் (லீலா) மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் அனுபவிக்க உதவுகிறது. பூஜையில் ஈடுபடுவதன் மூலம், உலகத்தை ஒரு தெய்வீக மண்டலமாகவும், அனைத்து உயிரினங்களையும் கடவுளின் வெளிப்பாடாகவும் பார்க்கலாம். இது ஒரு ஆழமான ஒற்றுமை மற்றும் பேரின்பத்திற்கு வழிவகுக்கிறது, தெய்வீகமான ஆனந்தத்தில் மூழ்கி அதனுடன் ஒன்றாக மாற உதவுகிறது.
இல்லை, மாறாக, அவர் ஒரு யாத்திரை சென்றார்.
ஸ்ரீகிருஷ்ணர் தான் பரம்பொருள். அவரை அடைவதற்கான மிகச் சிறந்த எளிய வழி துளசி தேவியின் பூஜையாகும். அந்தத் துளசி தேவியின் பூஜை நிறைய வழிகளில் உள்ளது. துளசியை தொடுவது, துளசியை தியானம் செய்வது, துளசியை பூஜிப்பது, துளசி ச�....
ஸ்ரீகிருஷ்ணர் தான் பரம்பொருள்.
அவரை அடைவதற்கான மிகச் சிறந்த எளிய வழி துளசி தேவியின் பூஜையாகும்.
அந்தத் துளசி தேவியின் பூஜை நிறைய வழிகளில் உள்ளது.
துளசியை தொடுவது, துளசியை தியானம் செய்வது, துளசியை பூஜிப்பது, துளசி செடியை நடுவது, அதற்கு தண்ணீர் விடுவது இவை அனைத்தும் துளசி பூஜையின் முறைகளாகும்.
கிருஷ்ணரை அடைவதற்கான எளிய வழியாகும்.
துளசியை பூஜை செய்பவர்களை பாவம் அணுகாது.
வீட்டில் துளசிச் செடியை நடுபவருக்கு வைகுண்டத்தில் சுகம் கிடைக்க பெறுவர்.
எப்பொழுது வரை துளசி செடி அந்த வீட்டில் இருக்கிறதோ அப்போது வரை எந்த துன்பமும் அணுகாது.
இந்தத் துளசி பெருமாளுக்கு எல்லாம் பூக்களை விடவும் விசேஷமானது.
அவருக்கு மிகவும் பிடித்தமானது.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து அழகான மலர்களும் தராசுத் தட்டில் ஒரு தட்டில் வைத்து மற்றொரு தட்டில் துளசி இலை வைத்தால், துளசி இலை உள்ள தட்டு பாரம் அதிகமாக இருக்கும்.
பெருமாளுக்கு மிகவும் உகந்த இலை துளசி.
பெருமாளுக்கு ஒரு துளசியால் அர்ச்சனை செய்தால் பல மலர்களால் அர்ச்சனை செய்த பலன் கிட்டும்.
ஆயிரம் பவுன் தானம் செய்த பலன் ஒரு துளசிச் செடி நடுவதால் கிடைக்கும்.
எங்கு ஒரு துளசி செடி இருக்கிறதோ அங்கு ஏழு புண்ணிய நதி இருப்பதாக ஐதீகம்.
துளசிக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் அந்த ஏழு நதிகளில் நீராடிய பலன் கிட்டும்.
துளசி பூஜையில் ஐந்து கிரியைகள் உள்ளது.
ரோபனம், பாலனம், சேசனம், தரிசனம் மற்றும் ஸ்பர்சனம்.
ரோபனம் என்பது துளசியை நடுவது.
பாலனம் துளசியை வளர்ப்பது.
சேசனம் துளசிக்கு தண்ணீர் விடுவது.
தரிசனம் துளசியை கண்ணால் பார்ப்பது.
ஸ்பர்சனம் துளசியை கைகளால் தொடுவது ஆகும்.
இந்த ஐந்தும் செய்பவர்களிடம் பாவம் இருக்காது.
எவன் ஒருவன் தான் இறக்கும் போது என் தலையில் துளசி வைத்துக் கொண்டு இறக்கிறானோ அவன் பாவம் அப்போது தீர்ந்துவிடும்.
அவர்கள் நேராக சொர்க்கத்தை அடைந்து விடுவார்கள்.
பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தமானது துளசி.
சிராத்தம் செய்யும்போது துளசிச் செடியின் அருகில் செய்தால் பித்ருக்களின் ஆசீர்வாதம் கண்டிப்பாக கிடைக்கும்.
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
ராதையும் துளசியும் ஒன்றுதான் என்று.
ராதை வேறு துளசி வேறு என்று நினைத்துக் கொண்டிருப்பவன் மிகப்பெரிய ஞானம் இல்லாதவன்,
ஆகவே துளசியை பூஜை செய்பவன் என்னை வந்து சேர்வான்.
துளசியை பூஜை செய்பவர்களை யமதூதர்களால் ஒன்றும் செய்ய முடியாது.
ஏனென்றால் எமதூதர்கள் மனிதர்களை எமலோகம் எடுத்துச் சென்று அவர்களின் பாவ புண்ணிய கணக்குகளை பார்ப்பார்கள்.
ஆனால் துளசியை பூஜை செய்தால் பாவங்கள் விலகி நேராக வைகுண்டம் செல்வார்கள்.
துளசியை பூஜை செய்பவர்கள் எமலோகம் செல்ல வேண்டிய அவசியமே இல்லை.
ஆகையால் வைகுண்டம் செல்ல ஒரு வழி துளசி பூஜை ஆகும்.
ராதா தேவி, கேதகி வனத்தில் துளசி தேவிக்கு ஒரு கோவில் கட்டினார்.
அவள் அதன் சுவற்றில் எல்லாம் தங்கத்தால் பூசி வைரங்களை பதித்து வைத்திருந்தாள்.
நான்கு புறமும் சுற்றி வரவும் வணங்குவதற்கும் பெரிய இடம் இருந்தது.
அதன் நடுவில் கர்ப்பகிரகம் இருந்தது.
அங்கு துளசி தேவியை பிரதிஷ்டை செய்து இருந்தால் ராதா தேவி.
ராதா தேவி அங்கேயே இருந்து துளசிக்கு விரதத்தை கடைப்பிடித்தாள்.
தண்ணீருக்குப் பதிலாக பசு மாட்டின் பாலை விட்டு வளர்த்தாள் கார்த்திகை மாதத்தில்.
மார்கழியில் கரும்பின் ரசத்தை விட்டாள்.
தைமாதத்தில் திராட்சையின் ரசம்.
மாசி மாதத்தில் பஞ்சாமிர்தம்.
பங்குனி மாதத்தில் நல்ல வாசனையுள்ள திரவியங்கள் சேர்த்த நீர்.
சித்திரை மாதத்தில் மாம்பழத்தின் ரசத்தை விட்டாள்.
வைகாசி மாதத்தின் முதல் நாள் இந்த விரதத்தை முடித்து அன்னதானமும் தானமும் வழங்கினாள்.
ராதை அவ்வாறு தானம் செய்யும் பொழுது மழை பொழிந்தது.
துளசி தேவி அவள் முன் தோன்றி வரம் வழங்கினாள்.
துளசி தேவி ராதையிடம் கூறினாள்:
நீ கிருஷ்ணருக்கு பிடித்தமான என்னை பூஜித்ததால் நீ கிருஷ்ணரையே சென்ற அடைவாய்.
எவ்விடத்தில் துளசி பூஜை நடக்கிறதோ அவ்விடத்தில் மழை பெய்து அனைவரும் நலமாக வாழ்வார்கள்.
அவர்களுக்கு எல்லா விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று வரம் வழங்கினார்.
மதுரைக்கு மதுரை என்ற பெயர் எப்படி வந்தது?
ஞானம், செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பாலா திரிபுர சுந்தரி மந்திரம்
ஶ்ரீம்ʼ க்லீம்ʼ ஹ்ரீம்ʼ ஐம்ʼ க்லீம்ʼ ஸௌ꞉ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ �....
Click here to know more..ஸப்தசதீ சார துர்கா ஸ்தோத்திரம்
யஸ்யா தக்ஷிணபாககே தஶபுஜா காலீ கராலா ஸ்திதா யத்வாமே ச ஸர�....
Click here to know more..