பலராமரும் ருக்மியும் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனின் திருமணத்தில் பகடை விளையாடிக் கொண்டிருந்தனர். ருக்மி ஏமாற்றி தன்னை வெற்றியாளராக அறிவித்தார். பலராமர் ருக்மியால் கேலி செய்யப்பட்டார். பலராமர் ஆத்திரத்தில் ருக்மியைக் கொன்றார்.
குபேரன் கடுமையான தவம் செய்து, லோகபாலர்களில் ஒருவராக பதவியையும் புஷ்பக விமானத்தையும் பெற்றார். அவரது தந்தை விஸ்ரவாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அவர் இலங்கையில் வசித்து வந்தார். குபேரனின் ஆடம்பரத்தைக் கண்டு, விஸ்ரவனின் இரண்டாவது மனைவியான கைகசி, தன் மகன் இராவணனை இதே போன்ற பெருமையை அடைய ஊக்குவித்தார். தனது தாயாரின் ஊக்குவிப்பால் இராவணன், தனது சகோதரர்களான கும்பகர்ணன் மற்றும் விபீஷணனுடன் கோகர்ணாவுக்குச் சென்று கடுமையான தவம் செய்தார். இராவணன் 10,000 ஆண்டுகள் இந்த கடுமையான தவம் செய்தான். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், அவர் தனது தலைகளில் ஒன்றை நெருப்பில் தியாகம் செய்வார். அவர் ஒன்பதாயிரம் ஆண்டுகளாக தனது ஒன்பது தலைகளையும் தியாகம் செய்தார்.பத்தாவது ஆயிரம் வருடத்தின் முடிவில் தனது மீதமிருந்த ஒரு தலையையும் அக்னிக்கு அர்ப்பணிக்க நேரும் பொழுது பிரம்மா அவரின் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்தார். பிரம்மா அவரை தேவர்கள், அசுரர்கள் மற்றும் பிற விண்ணுலகத்தவர்களாளும் வெல்ல முடியாத ஒரு வரம் அளித்தார், மேலும் அவரது ஒன்பது தலைகளை மீட்டுகொடுத்தார். இராவணனுக்கு பத்து தலைகள் மீண்டும் இருக்கச் செய்தார்.