அருள்மிகு மகிழீசுவரர் திருக்கோயில், பெருந்தலையூர்
கோபியிலிருந்து ஆப்பக்கூடல் செல்லும் சாலையில், கிழக்கே 23 கி.மீ. தொலைவில் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோவில்.
900 ஆண்டுகளுக்கு முற்பட்டது.
சுந்தரபாண்டியன் கல்வெட்டுக்கள் இங்குக் கண்டறியப்பட்டுள்ளன.
காஞ்சிக்கோயில் நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய "அழகிய செம்மநல்லூர்" தான் இன்று மகிழீசுவரர் திருக்கோயில் அமைந்துள்ள பெருந்தலையூர்.
ஊரின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறித்த கற்கள் எல்லையாக அமைந்திருப்பதும், முற்காலத்தில் சீரும் செழிப்புகளாகத் திகழ்ந்துள்ளதைக் காட்டுகின்றன.
அதன்பிறகு திருக்கோயில் முழுவதும் வர்ணம் பூசப்பட்டு 04.03.2004 அன்று திருக்குட நன்னிராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மேலும் உபயதாரர்கள் மூலம் திருக்கோயில் அடிவாரத்தில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டப்பட்டுக் கடந்த 02.09.2009 அன்று திறப்பு விழா நடைபெற்றது.
இத்திருக்கோயிலில் தினமும் மூன்றுகால பூஜைகள் நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணிக்கு விழாக்கால பூஜையும், பகல் 12.00 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜையும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருவிழாக்கள்
ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று சுவாமி பிரமனை சிறப்பாக நடைபெறுகிறது. வருடத் திருவிழாவாகத் தைப்பூம் பங்குனி உத்திரத்திருவிழா காலங்களில் காவடி அபிஷேகம் பால் குடங்கள் சிறப்பான முறையில் அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் கந்தர் சஷ்டி சூரசம்காரத் திருவிழா திருக்கல்யாண உற்சவம் சுவாமி திருவீதி உலா மலர் பல்லாக்கில் முத்துக்குமாரன் கோபி நகருக்கு எழுந்தருள்வார்.
மேற்படி விழா மூன்று நாட்களுக்கு லட்சார்ச்சனையும் யாக பூஜையும் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
பிரதி வாரம் செவ்வாய்க்கிழமை தோறும் கோமாத பூஜையுடன் திரிசடை அர்ச்சனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழாவும் மிகவும் சிறப்பான முறையில் இத்தலத்தில் நடைபெறுகிறது. நீங்கள் ஒரு தடவையேனும் நேரில் வந்து அதைக் காணவேண்டும்.
திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் :
காலை 6.00 மணி - பகல் 12.30 மணி
மாலை 4.00 மணி - இரவு 8.30 மணி.
தொடர்பு முகவரி : செயல் அலுவலர், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், பவளமாலை.
தொலைப்பேசி : +91 (0) 4285 222125
மகாதேவர் அகஸ்திய முனிவருக்கு பிரம்மாஸ்திரம் கொடுத்தார். அகஸ்தியர் அதை அக்னிவேசரிடம் கொடுத்தார். அக்னிவேசர் துரோணரிடம் கொடுத்தார். துரோணர் அர்ஜுனனிடம் கொடுத்தார்.
பலராமரின் தந்தை வசுதேவர். முதலில் பலராமன் தேவகியின் வயிற்றில் இருந்தார். தேவகியின் வயிற்றில் கரு இருந்தால் கம்சன் அதை அழித்து விடுவானோ என்று அஞ்சி, வசுதேவரின் மற்றொரு மனைவியான ரோகிணிக்கு கரு மாற்றப்பட்டது. தேவகி பலராமனின் உயிரியல் தாய், ரோகினி அவரது வாடகைத் தாய்.
செல்வத்திற்கு மகாலட்சுமி மந்திரம்
ௐ நம꞉ கமலவாஸின்யை ஸ்வாஹா .....
Click here to know more..அனுமன் மந்திரம்: செழிப்பு மற்றும் வெற்றி
ௐ ஹ்ரீம்ʼ ஶ்ரீம்ʼ ஹௌம்ʼ ஹ்ராம்ʼ ப²ட் ஸ்வாஹா....
Click here to know more..சேஷாத்ரி நாத ஸ்தோத்திரம்
அரிந்தம꞉ பங்கஜநாப உத்தமோ ஜயப்ரத꞉ ஶ்ரீநிரதோ மஹாமனா꞉. நா�....
Click here to know more..