ஶ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி ஶ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி ஆகம வேத கலாமய ரூபிணி அகில சராசர ஜனனி நாராயணி நாக கங்கண நடராஜ மனோகரி ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஶ்ரீசக்ர) பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும் பாட�....
ஶ்ரீசக்ர ராஜ சிம்மாசனேஸ்வரி
ஶ்ரீலலிதாம்பிகையே புவனேஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோகரி
ஞான வித்யேஸ்வரி ராஜராஜேஸ்வரி (ஶ்ரீசக்ர)
பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பதமலர் சூடவும்
உலகம் முழுதும் எனதகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஸ்வரி(ஶ்ரீசக்ர)
உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோருடன் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழல் எனத் தொடர்ந்த முன்னோர் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஸ்வரி (ஶ்ரீசக்ர)
துன்ப்ப் புடத்தில் இட்டுத் தூயவன் ஆக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி (ஶ்ரீசக்ர)