Knowledge Bank

சுய ஒழுக்கம் சமூகத்தின் அடித்தளம்

மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கமின்மை தவிர்க்க முடியாத சமூக ஊழலாக உருவாகிறது. காலத்தை கடந்த சனாதன தர்மத்தின் நெறிகள்- உண்மை, அகிம்சை மற்றும் சுயக்கட்டுப்பாடு ஆகும். இவை ஒரு நியாயமான மற்றும் இணக்கமான சமூகத்தை பராமரிக்க இன்றியமையாதது. இந்த நற்பண்புகளை அறிவித்தால் மட்டும் போதாது; தனிமனிதன் ஒவ்வொருவரும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தனிப்பட்ட ஒழுக்கம் சமரசமாகும் போது, ​​​​அதன் விளைவு சமூகத்தின் சீரழிவுக்கு வழிவகுக்கிறது. தனிப்பட்ட ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் புறக்கணித்தால், சமூகம் பேரழிவினை சந்திக்கும். சமுதாயத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், ஒவ்வொரு தனிமனிதனும் நன்நெறிகளை கடைபிடித்து, அசைக்க முடியாத நேர்மையுடன் செயல்பட வேண்டும்.

இராவணன் ஒன்பது தலைகளைத் தியாகம் செய்கிறான்

குபேரன் கடுமையான தவம் செய்து, லோகபாலர்களில் ஒருவராக பதவியையும் புஷ்பக விமானத்தையும் பெற்றார். அவரது தந்தை விஸ்ரவாவின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அவர் இலங்கையில் வசித்து வந்தார். குபேரனின் ஆடம்பரத்தைக் கண்டு, விஸ்ரவனின் இரண்டாவது மனைவியான கைகசி, தன் மகன் இராவணனை இதே போன்ற பெருமையை அடைய ஊக்குவித்தார். தனது தாயாரின் ஊக்குவிப்பால் இராவணன், தனது சகோதரர்களான கும்பகர்ணன் மற்றும் விபீஷணனுடன் கோகர்ணாவுக்குச் சென்று கடுமையான தவம் செய்தார். இராவணன் 10,000 ஆண்டுகள் இந்த கடுமையான தவம் செய்தான். ஒவ்வொரு ஆயிரம் ஆண்டுகளின் முடிவில், அவர் தனது தலைகளில் ஒன்றை நெருப்பில் தியாகம் செய்வார். அவர் ஒன்பதாயிரம் ஆண்டுகளாக தனது ஒன்பது தலைகளையும் தியாகம் செய்தார்.பத்தாவது ஆயிரம் வருடத்தின் முடிவில் தனது மீதமிருந்த ஒரு தலையையும் அக்னிக்கு அர்ப்பணிக்க நேரும் பொழுது பிரம்மா அவரின் தவத்திற்கு இணங்கி காட்சி கொடுத்தார். பிரம்மா அவரை தேவர்கள், அசுரர்கள் மற்றும் பிற விண்ணுலகத்தவர்களாளும் வெல்ல முடியாத ஒரு வரம் அளித்தார், மேலும் அவரது ஒன்பது தலைகளை மீட்டுகொடுத்தார். இராவணனுக்கு பத்து தலைகள் மீண்டும் இருக்கச் செய்தார்.

Quiz

யாகம் எந்த தேவதையின் வடிவம்?

தத்புருஷாய வித்³மஹே மஹாஸேனாய தீ⁴மஹி தன்ன꞉ ஷண்முக²꞉ ப்ரசோத³யாத்....

தத்புருஷாய வித்³மஹே மஹாஸேனாய தீ⁴மஹி தன்ன꞉ ஷண்முக²꞉ ப்ரசோத³யாத்

Other languages: KannadaTeluguMalayalamHindiEnglish

Recommended for you

எதிரிகள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கான மந்திரம்

எதிரிகள் மற்றும் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்கான மந்திரம்

ப்⁴ராத்ருவ்யக்ஷயணமஸி ப்⁴ராத்ருவ்யசாதனம் மே தா³꞉ ஸ்வாஹ....

Click here to know more..

ஸோமவார விரதத்தின் விதிகள்

ஸோமவார விரதத்தின் விதிகள்

Click here to know more..

சைலபுத்ரி ஸ்தோத்திரம்

சைலபுத்ரி ஸ்தோத்திரம்

ஹிமாலய உவாச - மாத꞉ ஸர்வமயி ப்ரஸீத பரமே விஶ்வேஶி விஶ்வாஶ்....

Click here to know more..