மகாபாரதம் மற்றும் காளிதாசரின் படைப்பான அபிஜ்ஞானசாகுந்தலத்தின் அடிப்படையில் ராஜா துஷ்யந்தருக்கும் சகுந்தலைக்கும் மகனாகப் பிறந்தவர் பரதன். ஒரு நாள், துஷ்யந்தர் குண்வ முனிவரின் ஆசிரமத்தில் சகுந்தலையைக் கண்டு திருமணம் செய்தார். பின்னர், சகுந்தலைக்கு பரதன் என்ற மகன் பிறந்தார்.பரதன் இந்திய கலாச்சாரத்தில் முக்கியமான இடம் வகிக்கிறார். அவரது பெயரால் தான் இந்தியாவின் பெயர் பாரதம் என்று வழங்கப்படுகிறது. பரதன் தமது சக்தி, துணிவு மற்றும் நேர்மையான ஆட்சியின் மூலம் அறியப்படுகின்றார். அவர் மிக சிறந்த அரசன் என அறிய படுகிறார். அவருடைய ஆட்சியில் பாரத தேசம் வளர்ச்சி மற்றும் செழிப்பை அடைந்தது
ஒரு மந்திரத்தின் அர்த்தத்தையும், சாராம்சத்தையும் அறியாத ஒருவர், அதை ஆயிரம் கோடி முறை ஜபித்தாலும், அதன் மூலம் வெற்றியை அடைய முடியாது. மந்திரத்தின் பொருளைப் புரிந்துகொள்வது முக்கியம். மந்திரத்தின் சாராம்சத்தை அறிவது மிகவும் முக்கியம். இந்த அறிவு இல்லாமல், வெறும் மந்திரம் வேலை செய்யாது. திரும்பத் திரும்ப உச்சரிப்பது கூட பலனைத் தராது. வெற்றிக்கு புரிதலும் விழிப்புணர்வும் தேவை.