மருதமலை மாமணியே முருகையா

 

மருதமலை மாமணியே முருகையா பாடல்

 

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்குமலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை.
மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே. முருகய்யா
மருதமலை மாமணியே. முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா
தைப்பூச நந்நாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா. ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா.

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்.

மருதமலை மாமணியே முருகய்யா.
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா.
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

 

19.1K

Comments

8wn3u

முருகனின் சடாட்சர மந்திரம்

1. ௐ வசத்³பு⁴வே நம꞉ 2. ஶரவணப⁴வ

மரணத்தின் உருவாக்கம்

சிருஷ்டியின் போது, பிரம்மா உலகம் விரைவில் உயிர்வாழும் பிராணிகளால் நிரம்பி விடும் என நினைக்கவில்லை. பிரம்மா உலகின் நிலையை பார்த்தபோது கவலைப்பட்டார் மற்றும் எல்லாவற்றையும் எரிக்க அக்னியை அனுப்பினார். பகவான் சிவன் தலையிட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு முறையான வழியை பரிந்துரைத்தார். அப்போதே பிரம்மா அதை செயல்படுத்த மரணத்தையும், மரண தெய்வத்தையும் உருவாக்கினார்.

Quiz

கன்னியாகுமரி தேவியின் மணமகன் அங்கேயே அருகில் இருக்கும் ஒரு கோவிலில் இருக்கிறார். அந்த கோவில் எங்கே இருக்கிறது?
Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |