39.4K

Comments

y3f2m

நரசிம்மர் ஏன் அஹோபிலத்தை தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார்?

நரசிம்மர் ஹிரண்யகசிபு என்ற அரக்கனை அஹோபிலத்தில் வீழ்த்தியதால் அதைத் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஹிரண்யகசிபுவின் மகனும், விஷ்ணுவின் தீவிர பக்தருமான பிரஹலாதன், அஹோபிலத்தை தனது நிரந்தர வசிப்பிடமாக மாற்ற நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்தார். பிரஹலாதரின் மனப்பூர்வமான வேண்டுதலுக்கு இணங்க, நரசிம்மர் அந்த இடத்தைத் தனது இருப்பிடமாக மாற்றி அருள்பாலித்தார். பகவான் நரசிம்மர் அஹோபிலத்தை ஏன் தனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை அறிவது உங்கள் ஆன்மீக நுண்ணறிவை ஆழப்படுத்தும் மற்றும் பக்தியை வளர்க்கும்

ஆஞ்சநேயர் என்ன நற்பண்புகளை அடையாளப்படுத்துகிறார்?

ஆஞ்சநேயர் பக்தி, விசுவாசம், தைரியம், வலிமை, பணிவு மற்றும் தன்னலமற்ற தன்மை ஆகியவற்றைக் குறிக்கிறார். இவர் உங்கள் சொந்த வாழ்க்கையில் நற்பண்புகளை உள்ளடக்கி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீக வளர்ச்சியை வழிகாட்டுவார்.

Quiz

மயில் உருவில் பார்வதி தேவி எங்கே தவம் புரிந்தாள்?

பூலோகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஆசைப்படுவது: பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பது தான். பாவம் என்பது என்னவென்றால்: தர்ம சாஸ்திரத்தில் செய்யக்கூடாது என்று கூறியதைச் செய்வது பாவம். தர்ம சாஸ்திரத்தில்....

பூலோகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஆசைப்படுவது: பாவத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பது தான்.

பாவம் என்பது என்னவென்றால்:
தர்ம சாஸ்திரத்தில் செய்யக்கூடாது என்று கூறியதைச் செய்வது பாவம்.

தர்ம சாஸ்திரத்தில் செய் என்று கூறியிருப்பதைச் செய்யாமல் இருப்பதும் பாவம்.

இவ்விரண்டு பாவங்களும் மனிதர்களுக்குக் கஷ்டத்தையும், துன்பத்தையும், நோயையும் கொடுக்கும்.

தனக்குக் கெடுதல் என்று சொல்லியிருப்பதைச் செய்வது.

அடுத்தவர்களுக்கு எது கெடுதல் என்று சொல்லி இருக்கிறதோ அதைச் செய்வது.

இவை இரண்டும் பாவங்களாகும்.

பாவங்கள் மூன்று விதமாக உள்ளன.

அவை உடல் மூலமாகச் செய்வது, வாக்குமூலமாகச் செய்வது மற்றும் மனதின் மூலமாகச் செய்யும் பாவங்கள்.

ஒருவரின் உயிரை எடுப்பது, பொருட்களைத் திருடுவது, அடுத்த பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது: இவை அனைத்தும் உடலால் செய்யப்படும் பாவங்களாகும்.

தவறான விஷயங்களைப் பரப்புவது, நலன் செய்பவர் மீது வெறுப்பைக் காண்பிப்பது, பிச்சை கேட்டு வந்தவரை திட்டி விரட்டுவது, பொய் பேசுவது: இவை அனைத்தும் வாக்கினால் செய்யப்படும் பாவங்களாகும்.

மனதில் கெடுதலை நினைப்பது, அடுத்தவர் பொருள் மீது ஆசைப்படுவது, மனதில் நல்லதை நினைக்காமல் இருப்பது: இவை அனைத்தும் மனத்தினால் செய்யப்படும் பாவமாகும்.

இதுபோல நிறையப் பாவங்கள் உள்ளன.

சிறிய சிறிய பாவங்களும் உள்ளன.

உதாரணமாக:
தன்னிடம் உள்ள குறைகளையும் அல்லது தான் செய்த தவற்றை மறைப்பது, அடுத்தவர்களிடம் இல்லாத குறையை இருக்கு என்று கூறுவது, அடுத்தவள் செய்யாதவற்றைச் செய்தார் என்று கூறுவது இவைகளும் பாவங்களாகும்.

பாவங்கள் பரவும் தன்மை உடையது.

ஆகையால் தான் பாவம் செய்தவர்கள் உடன் நட்பை வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறார்கள்.

பாவிகளுடன் பேசுவதாலோ, நாம் அவரை தொடுவதாலோ அல்லது அவர் நம்மை தொடுவதாலோ, அவர்களுடன் தங்கியிருந்தாலோ, சாப்பிட்டாலோ, உறங்கினாலோ, அல்லது சென்றாலோ:
அந்த பாவம் நமக்கும் பரவும்.

பாவத்திலிருந்து விடுபட, இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி அதற்கான தண்டனையை அனுபவிப்பது.இரண்டாவது நாம் செய்தது பாவம் என்று ஒப்புக் கொண்டு அதற்கான பரிகாரம் செய்வது.

இந்த பரிகாரங்களில் ஒன்று சிவபெருமானின் கதை கேட்பது.

சிவபெருமானின் புண்ணிய கதைகளைக் கேட்டால் எல்லா பாவங்களும் அழியும்.

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |