துர்கை அம்மன் 108 போற்றி

ஓம் அம்மையே போற்றி
ஓம் அம்பிகையே போற்றி
ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி
ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி
ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி
ஓம் ஆதார சக்தியே போற்றி
ஓம் ஆதி பராசக்தியே போற்றி
ஓம் இருள் நீக்குபவளே போற்றி
ஓம் இதயம் வாழ்பவளே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் இஷ்ட தேவதையே போற்றி
ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி
ஓம் ஈடிணை இல்லாதவளே போற்றி
ஓம் ஈகை மிக்கவளே போற்றி
ஓம் உமையவளே தாயே போற்றி
ஓம் உயிர் பிச்சை தருவாய் போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி
ஓம் எலுமிச்சை பிரியையே போற்றி
ஓம் எட்டுத்திக்கும் வென்றவளே போற்றி
ஓம் ஏகாந்த முத்துமாரியே போற்றி
ஓம் ஏழையர் அன்னையே போற்றி
ஓம் ஐங்கரத்தவளே போற்றி
ஓம் ஒற்றுமை காப்பாய் போற்றி
ஓம் ஓங்கார ரூபிணியே போற்றி
ஓம் ஒளடதம் ஆனவளே போற்றி
ஓம் கவுமாரித்தாயே போற்றி
ஓம் கண்ணாகத் திகழ்பவளே போற்றி
ஓம் கரை சேர்ப்பவளே போற்றி
ஓம் காக்கும் அன்னையே போற்றி
ஓம் கிள்ளை மொழியாளே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவளே போற்றி
ஓம் குங்குமநாயகியே போற்றி
ஓம் குறை தீர்ப்பவளே போற்றி
ஓம் கூடிக் குளிர்விப்பவளே போற்றி
ஓம் கைக்கொடுப்பவளே போற்றி
ஓம் கோலப்பசுங்கிளியே போற்றி
ஓம் சக்தி உமையவளே போற்றி
ஓம் சவுந்தர நாயகியே போற்றி
ஓம் சித்தி தருபவளே போற்றி
ஓம் சிம்மவாகினியே போற்றி
ஓம் சீரெல்லாம் தருபவளே போற்றி
ஓம் சீதளா தேவியே போற்றி
ஓம் சூலம் ஏந்தியவளே போற்றி
ஓம் செந்தூரநாயகியே போற்றி
ஓம் செண்பகாதேவியே போற்றி
ஓம் செந்தமிழ் நாயகியே போற்றி
ஓம் சொல்லின் செல்வியே போற்றி
ஓம் சேனைத் தலைவியே போற்றி
ஓம் சோகம் தீர்ப்பவளே போற்றி
ஓம் தத்துவ நாயகியே போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் தரணி காப்பாய் போற்றி
ஓம் தர்ம தேவதையே போற்றி
ஓம் உலகநாயகியே போற்றி
ஓம் தத்துவம் கடந்தவளே போற்றி
ஒம் தாலிபாக்கியம் தருவாய் போற்றி
ஓம் தாமரைக் கண்ணியே போற்றி
ஓம் தீமை களைப்பவளே போற்றி
ஓம் துன்பம் தவிர்ப்பவளே போற்றி
ஓம் தூய்மை மிக்கவளே போற்றி
ஓம் தென்றலாய் குளிர்பவளே போற்றி
ஓம் தேசமுத்து மாரியே போற்றி
ஓம் தையல் நாயகியே போற்றி
ஓம் தொல்லை போக்குவாய் போற்றி
ஓம் தோன்றாத் துணையே போற்றி
ஓம் நன்மை அளிப்பவளே போற்றி
ஓம் நலமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் நாக வடிவம் கொண்டவளே போற்றி
ஓம் நாத ஆதாரமே போற்றி
ஓம் நாகாபரணியே போற்றி
ஓம் நானிலம் காப்பாய் போற்றி
ஓம் நித்திய கல்யாணியே போற்றி
ஓம் நிலமாக நிறைந்தவளே போற்றி
ஓம் நீராக குளிர்ந்தவளே போற்றி
ஓம் நீதி நெர்மை காப்பவளே போற்றி
ஓம் நெஞ்சம் நிறைபவளே போற்றி
ஓம் நேசம் காப்பவளே போற்றி
ஓம் பக்தர்த்ததிலகமே போற்றி
ஓம் பவளவாய் கிளியே போற்றி
ஓம் பல்லுயிரின் தாயே போற்றி
ஓம் பசுபதி நாயகியே போற்றி
ஓம் பாம்புருவமானாய் போற்றி
ஓம் புற்றாகி நின்றவளே போற்றி
ஓம் பிச்சியாய் மணப்பவளே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
ஓம் பிள்ளையைக் காப்பாய் போற்றி
ஓம் பீடை போக்குபவளே போற்றி
ஓம் பீடோப ஹாரிணியே போற்றி
ஓம் புத்தி அருள்வாய் போற்றி
ஓம் புவனம் காப்பாய் போற்றி
ஓம் பூமாரித்தாயே போற்றி
ஓம் பூவில் உறைபவளே போற்றி
ஓம் பூஜைக்குரியவளே போற்றி
ஓம் பூக்குழி ஏற்பவளே போற்றி
ஓம் பூசல் ஒழிப்பவளே போற்றி
ஓம் மழைவளம் தருவாய் போற்றி
ஓம் மங்கள நாயகியே போற்றி
ஓம் மந்திர வடிவானவளே போற்றி
ஓம் மழலை அருள்வாய் போற்றி
ஓம் மண்ணுயிர் காப்பாய் போற்றி
ஓம் மாணிக்க வல்லியே போற்றி
ஓம் மகமாயித் தாயே போற்றி
ஓம் முண்டகக்கண்ணியே போற்றி
ஓம் முத்தாலம்மையே போற்றி
ஓம் முத்து நாயகியே போற்றி
ஓம் வாழ்வு அருள்வாய் போற்றி
ஓம் வீரபாண்டி வாழ்பவளே போற்றி
ஓம் வேம்பில் இருப்பவளே போற்றி
ஓம் ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி போற்றி

15.7K

Comments

jqxx5

Other stotras

Copyright © 2024 | Vedadhara | All Rights Reserved. | Designed & Developed by Claps and Whistles
| | | | |